Tamilnadu

தன் சொந்த கருத்தை சொல்லியதால் திமுக ஆட்சியிலும் சிக்கிய செந்தில்

Senthil
Senthil

தமிழக பத்திரிகையாளர்களில் ஒரு தரப்பிற்கு ஜால்றா அடிப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரபல தேசிய. ஊடகத்தில் இருந்து வெளியேறியவர் செந்தில் தற்போது இவர் யூடுப்பர் ஆகவும், பகுதி நேர நெறியாளராகவும் தனியார் ஊடகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.


திமுகவின் அனுதாபியாக பார்க்கப்படும் செந்தில் தனது நகைச்சுவை பேச்சுக்களின் மூலம் அவ்வப்போது இணைய வாசிகளிடம் சிக்குவது வழக்கம் கடந்த ஆண்டு சீப்பு கதை சொல்லி, வேலை இழந்தது மட்டுமல்லாமல், சீப்பு செந்தில் என ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்தார், திமுக என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அதனை அப்படியே பின்பற்றுபவர் செந்தில்.

ஒன்றிய அரசு என திமுக என்று கூற ஆரம்பித்ததோ அன்றில் இருந்து தானும் அவ்வாறே கூற ஆரம்பித்தார், முன்னணி ஊடகத்தில் பணிபுரியும் TRP யில் முதல் இடங்களில் உள்ள ஊடகங்கள் வழக்கம் போல் மத்திய அரசு என்றே பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது, இந்த சூழலில் வழக்கம் போல் தரவுகள் இல்லாமல் நீட் தேர்வு குறித்து கருத்து சொல்லி வசமாக சிக்கியுள்ளார் செந்தில்.

உலகின் சிறந்த 100 மருத்துவ கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்த 2 கல்லூரிகள் இடம் பிடித்தன என செய்தியை மேற்கோள் காட்டிய செந்தில் அதனை கெடுக்கதான் நீட் என தெரிவித்தார், இதற்கு சுந்தர் ராஜா சோழன் என்பவர் மிகவும் நேர்த்தியாக பதிலடி கொடுத்துள்ளார் அதில் :- 

சீப்பு செந்திலின் அரியவகை காமெடிகளில் இதுவும் ஒன்று..உலகில் தலை சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் 100 ல் 6 கல்லூரிகள் இந்தியாவில் இடம்பெற்றுள்ளன டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி 23-வது இடத்திலும், புனே ராணுவ மருத்துவ கல்லூரி 34-வது இடத்திலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி 59-வது இடத்திலும், வாரணாசியில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவ கல்லூரி 72-வது இடத்திலும் உள்ளன.

இதிலெல்லாம் நீட் இல்லையா? இந்த 4 கல்லூரியும் குமரிக்கண்டத்திலா உள்ளது?  அதோடு தமிழகத்தில் இடம்பெற்றுள்ள வேலூர் கிருஸ்டியன் மெடிக்கல் காலேஜில் உள்ள 100 இடங்களில் 74 இடங்களை நீட்டுக்கு முன்னால் CMC கல்லூரியேதான் நிரப்பி வந்தது. சிறுபான்மை கல்வி நிறுவனம் என்ற சலுகையை பயன்படுத்தி 74 இடங்களிலும் எந்த விதமான இட ஒதுக்கீடும் பின்பற்றப்படாமல் கிருஸ்த்தவ மிஷனரிகளின் சிபாரிசின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடந்தது.

நீட் வந்த பிறகுதான் 85% இடங்களை அரசிடம் ஒப்படைக்கிறது CMC.இப்போது 85% தமிழக மாணவர்களுக்கே கிடைக்கும் என சட்டம் உறுதிப்படுத்துகிறது. அதிலும் CMC யில் 69% இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா? அல்லது நீட் தர வரிசையில் மிஷனரிகளின் சிபாரிசு அடிப்படையிலேயே இன்னும் நியமனம் நடக்கிறதா என யாராவது தெளிவுபடுத்தி எழுதினால் நலம்.

நீட் வருவதற்கு முன் எல்லா தனியார் கல்வி நிறுவனங்களும் 30% - 50% ற்குள்ளான சீட்டுகளை மட்டுமே அரசிடம் ஒப்படைத்தார்கள்..நீட் வந்த பிறகே 69% இடஒதுக்கீடும்,85% அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் கிடைக்க உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என பதிலடி கொடுத்துள்ளார்.திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர்தான் நெட்டிசன்களிடம் சிக்கினார் தற்போது திமுக ஆட்சி அமைந்த பிறகும் தனது தரவுகள் அற்ற பேச்சால் நெட்டிசன்களிடம் சிக்கி வருகிறார், ஒன்றிய செந்தில்.

நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி படுத்திய நிலையில் மக்களை பொறுப்பற்ற பேச்சுக்கள் மூலம் திசை திருப்புவதை செந்தில் போன்றவர்கள் என்றுதான் மாற்றி கொள்ள போகிறார்களோ?