Tamilnadu

குவிந்த மாணவர்கள் வெளியேற்றிய போலீஸ் போடு திருப்பி தாக்க தொடங்கிய திமுக வியூகம் !!

Udayanidhi
Udayanidhi

வழக்கமாக நீட் தேர்வு பயத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் வீட்டில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதியை பார்க்கலாம், இந்நிலையில் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக உதயநிதி வீட்டின் முன்பு தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்வர்கள் குவிந்தது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


சமீபத்தில் நடந்த இங்கிலிஷ் ஷார்ட் சீனியர் தேர்வில் பல வார்த்தைகள் மாற்றி உபயோகம் செய்யபட்டதாகவும் இதனால் தங்கள் வாழ்க்கையே பறிபோகும் நிலை உண்டாகி இருப்பதாகவும், உடனடியாக மறு தேர்வு நடத்த வேண்டும் எனவும், இதனை வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலினை சந்திக்க வந்திருப்பதாக தேர்வு எழுதிய மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் 2500 மாணவர்கள் இந்த முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஒவ்வொருவரும் இந்த தேர்வினை நம்பி  பல ஆண்டுகள் நேரத்தை செலவு செய்து படித்தும் இப்போது அராங்கம் பக்கம் நடந்த தவறு மூலம் நாங்கள் பாதிக்கப்படும் சூழல் உண்டாகியுள்ளதால் உடனே மறு தேர்வினை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேர்வுகளை கொண்டு மாணவர்களை உசுப்பேற்றும் நடவடிக்கைகளை கொள்கையாக கொண்டுள்ள கட்சி திமுக நீட் தேர்வை மையமாக வைத்து பல போராட்டங்களை நடத்தியது ஆனால் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்ய இயலவில்லை, மத்திய அரசு முயன்றால் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய இயலும் என கைவிரித்து விட்டது திமுக அரசு.

இந்த சூழலில் தமிழக அரசு நினைத்தால் உடனடியாக உதயநிதி வீட்டின் முன்பு போராடிய மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மறு தேர்வு நடத்தலாம் இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் ஏதும் தேவையில்லை இதுவரை நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் போராட்டத்தில் இறங்காத போதே நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என மிக பெரிய ஆப்பட்டாங்களை நடத்திய திமுகவும் உதயநிதியும் இங்கிலிஷ் ஷார்ட் சீனியர் தேர்வு எழுதிய ஆண்களும் பெண்களும் போராட்டம் நடத்திவரும் சூழலில் ரத்து செய்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்வுகளை மையமாக வைத்து மத்திய அரசை எதிர்த்த திமுகவிற்கு அதே போன்ற தேர்வுகள் மூலமே எதிர்ப்பு கிளம்பி இருப்பது ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.