நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் லியோ. இந்த படம் வெளியாக 9 நாட்களே உள்ளது. படத்தினை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கும் நிலையில், விஜய் படம் என்றாலே ஆடியோ வெளியிட்டு விழாவில் விஜய் தனது ரசிகர்களுக்கு ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து அதில் வைப்பை ஏற்படுத்துவார்.ஆனால் விஜயின் லியோ படம் அந்த வாய்ப்பை ரசிகர்களுக்கு வழங்கவில்லை. பாதுகாப்பு காரணங்கள் காரணமாக இந்த படத்திற்கு ஆடியோ வெளியிட்டு விழா ஏற்படுத்த முடியவில்லை இதன் காரணமாக ரசிகர்கள் சற்று தொய்வில் இருக்கின்றனர். படத்திற்கு புரொமோஷன் நிகழ்ச்சி ஏதும் இல்லாமல் இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் குறைந்துள்ளது.
தற்போது படத்தின் புரொமோஷன் களத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இறங்கியுள்ளார். லோகேஷ் யூடியூப் சேனல்களில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு அப்டேட் மற்றும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க பேசி வருகிறார். மற்றொரு பக்கம் மேயாத மான் படத்தின் இயக்குனரும் மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ படங்களின் துணை கதை ஆசிரியருமான ரத்னகுமார் அவரது பங்குக்கு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து விஜய் ரசிகர்களை ஃபயர் மோடுக்கு கொண்டு வருகிறார். இருவரும் தீவிரமாக படத்தின் புரமோஷன் விழாவில் குதித்துள்ளனர். கடைசியாக விஜயின் வாரிசு படத்திற்கு பல வகைகளில் புரொமோஷன் செய்தனர்.அப்போது சென்னை மெட்ரோ ரயில் மற்றும் தயாரிப்பாளர் ஆடியோ வெளியிட்டு விழாவில் படத்தில் லவ்வு வேணுமா லவ் இருக்கு போன்று பேசிய வசனங்கள் ரசிகர் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது, மேலும் விஜய் ஆடியோ வெளியிட்டு விழாவில் ரசிகர்களிடம் பேசியதும் படம் வசூல் சாதனை படைத்தது. லியோ-விற்கு மட்டும் புரொமோஷன் குறைந்து விட்டது.
இருப்பினும் லியோ படத்தின் துணை கதை ஆசிரியர் ரத்னகுமார் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியது: லியோ படத்திற்காக விஜயின் சம்பளம் 130 கோடி என் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பேசிய ரத்தனகுமார் ஒரு படி மேலே சென்று புரொமோஷனை தெரிவித்துள்ளார். அதாவது லியோ படம் முதல் பாதி ஆட்டோ பாம்மை பற்றி வைத்து வெடிப்பது போல் இருக்கும் என்றும், திடீரென நடுவில் சற்று அமைதியாகும். சரியாக பற்ற வைக்கவில்லை என்று நினைத்து கொண்டே போனால், மீண்டும் வெடிக்க தொடங்கும் அப்படித்தான் இருக்கும் முதல் பாதி. சிறிது நேரம் இடைவேளைக்கு பின் இருக்கையில் அமர்ந்தால் இரண்டாம் பாகம் தொடங்கும் போது பட்டாசு கடையில் பட்டாசுகள் வெடிக்கும்பொழுது எப்படி கண்ணா பின்னான்னு வெடிக்குமோ அப்படி தீயாக இருக்கும் இரண்டாம் பாதி.
மொத்தத்தில் படம் தீபாவளி போல வெடித்து கொண்டே இருக்கும் என்று அவரது முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளர்.மேலும், இந்த படத்தில் தளபதியும், ஆக்சன் கிங் அர்ஜுனும் ஒன்றாக மோதிக்கொள்ளும் காட்சி டாக் ஆஃப் தி டவுனாக மாறும் என்றும், இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தின் ரீ ரெக்கார்டிங் இல்லாமலே படம் பிளாக்பஸ்டர் தான் என்றும், அனிருத்தின் இசையும் கலந்து விட்ட பின்னர் டபுள் பிளாக்பஸ்டர் ரெடியென லோகேஷிடம் தான் சொன்னதாகவும் கூறியுள்ளார். எப்போதும் விஜய் படத்திற்கு புரொமோஷன் செய்வார். ஆனால் இதுவரை அவர் மௌனம் காத்து வருகிறார், இருவர் மட்டும் படத்தின் புரொமோஷன் பணிகள் செய்வதால் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துவிட்டால் அவ்ளோதான் இனிமேல் விஜயின் குட்டி ஸ்டோரி ஓரம் கட்டப்படலாம் என்று கூறப்படுகிறது.