இந்து கடவுளை இழிவுபடுத்தும் விதமாக பேசிய மைனர் என்பவரை கைது செய்ய கோரியும், அவனது யூடுப் சேனலை முடக்க வேண்டும் என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து காவல் நிலையங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர், ஒரு பக்கம் இந்துக்கள் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
ஆனால் இது வரை தமிழக காவல்துறை மைனர் என்பவன் மீது நடவடிக்கை எடுக்காதது அரசியலை கடந்த பொது மக்கள் மீதும் காவல்துறை மீதான சந்தேகத்தை அதிகரித்து வருகிறது, இது ஒருபுறம் இருக்க நடிகை கஸ்தூரி இந்துக்கடவுளான சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்தும் விதமாக பேசிய நபரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அதுபின்வருமாறு :-
கடவுளை பற்றி பேச கழிசடைகளுக்கு என்ன தெரியும்? பிறப்பின் மூலத்தை பாவமாக பார்ப்பது உங்கள் தலையெழுத்து . லிங்கத்திலும் யோனியிலும் பிரபஞ்சத்தை பூஜிப்பவர்கள் நாங்கள். அதில் வக்கிரம் கற்பிப்பவர்கள் மூடர்கள். ஆடியபாதத்தை அறியாத கூமுட்டைகள் எதை தூக்கிகிட்டு வந்தாலும் அங்கு ஒண்ணுமில்லையாம் .
அதல்லவோ பெரிய வெட்கம் ! சிலருக்கு ஆண்மையும் உண்மையும் கண்ணுக்கு புலப்படாதுதான், ஆனாலும் இருக்கு என்று நீங்கள் நம்பவில்லையா? தெரியும் வரை தேடுங்கள்- இரண்டையுமே ! #U2 #k9 என குறிப்பிட்டுள்ளார், அதாவது k9 என்ற tag மூலம் கேனயன் என கஸ்தூரி ஒரே வார்த்தையில் மைனர் என்பவனை விமர்சனம் செய்துள்ளார்.
திரை துறையிலும் தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வரும் சூழலில் இனியாவது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்குமா அல்லது வேடிக்கை பார்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.