தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா என்னும் திரைப்படத்தில் அறிமுகமாகி முதல் திரைப்படத்திலேயே அனைவரின் மனதிலும் தனது முகத்தினை பதிய வைத்த நடிகை தான் நயன்தாரா!! முதல் படத்திலேயே தனது திறமையினால் சூப்பராக நடித்திருந்ததால் அவருக்கு அடுத்த திரைப்பட வாய்ப்பானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிப்பதற்கு கிடைத்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்றால் பல திரைப்படங்களில் நடித்த பிறகுதான் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் நயன்தாராவிற்கு தனது இரண்டாவது திரைப்படத்திலேயே இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்தது. இப்படி தனது திரைப்பட வாழ்க்கையை துவங்கி இன்று வரை 75 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து அதில் பல வெற்றிகளையும் தோல்விகளையும் தொடர்ந்து சந்தித்து வரும் நடிகை நயன்தாரா ஒரு பிரபலமான முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் தனது பணியினை தொடர்ந்து வருகிறார். தொடர்ந்து இவரின் நடிப்பினால் இன்னும் அதிக அளவில் ரசிகர்களை பெற்று அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். கடைசியாக ஜவான் என்னும் திரைப்படத்தில் ஷாருக்கான் இணைந்து அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஐயா திரைப்படத்தில் துவங்கி ஜவான் திரைப்படம் வரை இவருக்கு இருக்கும் ரசிகர்கள் என்றால் மிகவும் அதிகமான அளவிலேயே தான் இருந்து வருகின்றனர். ஒரு நடிகை என்றாலே மிகவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே அவருக்கு படத்தில் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் நடிகை நயன்தாராவிற்கு இன்று வரையிலும் படத்தின் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே தான் இருக்கிறது காரணம் அவரின் கடின உழைப்பும், மாறாத அழகும் ஆகும். மேலும் நயன்தாரா தற்போது நடிப்பில் மட்டுமல்லாமல் 9skin என அழகு சாதன பொருட்களை வைத்து தற்போது பிசினஸையும் செய்து வருகிறார். இப்படி ஒரு பக்கம் பிசினஸ் மற்றும் மறுபக்கம் நடிப்பில் கான்சன்ட்ரேட் செய்து சூப்பராக தனது பணியினை தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கில் கண்ணப்பா என்னும் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. அதில் நயன்தாரா பார்வதி போன்ற வேடமும் அவருக்கு ஜோடியாக சிவன் வேடம் அணிவதற்கு பிரபல நடிகர் பிரபாஸ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஒரு நாள் தற்போது அந்தப் படத்தில் சிவனாக பிரபாஸ் நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமார் சிவனாக நடிக்கப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்ததை ஒட்டி அந்தத் திரைப்படத்திலிருந்து நயன்தாரா நடிக்கவில்லை என்று விலகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பார்வதி கேரக்டரில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கப் போவதாகவும், மோகன்லால், பிரபாஸ் மற்றும் சரத்குமார் போன்ற பலரும் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகிறது.
இது போன்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருந்தாலும் கூட உண்மையிலேயே நடிகை நயன்தாரா அக்ஷய் குமார் இந்தப் படத்தில் நடிப்பதால் தான் விலகினாரா என்றும் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் புரியவில்லை. மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகை குறித்த உண்மையான அறிக்கை ஏதும் இன்றும் வெளியிடப்படவில்லை. எனவே சரியான தகவல் வெளியாகும் வரை ரசிகர்கள் அனைவரும் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் நயன்தாரா இந்த திரைப்படத்திலிருந்து விலகி இருப்பது பற்றி தகவல்கள் வெளியாகும் பொழுது அவரின் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த செய்திகள் தற்போது இணையத்தில் வைரலாகி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது!!