கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் வெளியிடப்பட்ட அறிக்கையை பாஜகவினர் விமர்சனம் மற்றும் கிண்டல் செய்து வருகின்றனர், மக்கள் நீதி மையம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், , "தமிழகத்தில் அண்மைக்காலமாக பத்திரிகையாளர்களை சிறுமைப்படுத்துவதும், அச்சுறுத்துவதும் அடிக்கடி நிகழ்கிறது.
பத்திரிகையாளர்களின் கேள்விகள் தர்மசங்கடம் அளித்தால், அவற்றைத் தவிர்க்கலாமே தவிர, செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல. ஊடகவியலாளர்கள் மரியாதையோடு நடத்தப்படவேண்டியது அவசியம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை 200, 300என ஏலம் விட்டு அவமானப்படுத்திவிட்டார் என ஒரு தரப்பு குற்றசாட்டு சுமத்தி வருகிறது, மேலும் சில பத்திரிகையாளர்கள் சங்கமும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர், இந்த சூழலில் அண்ணாமலை யாரையும் தவறாக பேசவில்லை,
தொடர்ச்சியாக உள் நோக்கத்துடன் கேள்வி எழுப்பிய நபரை தான் அடையாள படுத்தினார் என்று பாஜகவினர் கூறுகின்றனர் அத்துடன் அண்ணாமலைக்கு எதிராக அறிக்கை கொடுக்கும் கமல்ஹாசன் கட்சி உட்பட யாரும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ்.பாரதி பேசிய போது வாய் திறக்கவில்லையே ஏன் எனவும் கேள்வி எழுப்பு வருகின்றனர்.
வடிவேலு ஒரு படத்தில் சொல்லுவார் எங்கே இதுக்கு மட்டும் கத்துதா அந்த பல்லி என அதே போல் இருக்கிறது கமலின் அறிக்கை எனவும் பாஜகவினர் கிண்டல் அடிக்கின்றனர். அண்ணாமலை பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.