Politics

6-ல் ஒன்று மட்டுமே கருத்துக்கணிப்பு முடிவுகள் எதிரொலி!! உங்கள் வாய்தான் காரணம் கோவப்பட்ட நிர்வாகிகள் திருமாவளவன் அதிருப்தி!!

6-ல் ஒன்று மட்டுமே கருத்துக்கணிப்பு முடிவுகள் எதிரொலி!! உங்கள் வாய்தான் காரணம் கோவப்பட்ட நிர்வாகிகள் திருமாவளவன் அதிருப்தி!!
6-ல் ஒன்று மட்டுமே கருத்துக்கணிப்பு முடிவுகள் எதிரொலி!! உங்கள் வாய்தான் காரணம் கோவப்பட்ட நிர்வாகிகள் திருமாவளவன் அதிருப்தி!!

தமிழகத்தில் அடுத்து அமைய போவது யாருடைய ஆட்சி என்பது நாளை மறுநாள் உறுதியாகும், இந்நிலையில் நேற்று மாலை முக்கிய ஆங்கில ஊடகங்கள், தமிழக ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டன அதன் படி தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும் என குறிப்பிடப்பட்டது. சில கருத்து கணிப்புகள் இழுபரியாக முடிவுகள் இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.


இந்த நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து பானை சின்னத்தில் போட்டியிட்டது விசிக இதில் ஆளூர் ஷாநவாஸ், வன்னியரசு உட்பட 6 வேட்பாளர்கள் பானை சின்னத்தில் களம் இறங்கினர், இந்நிலையில் பிரபல தமிழக ஊடகமான தந்தி டிவி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது அதில் விசிக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் இரண்டு இடங்கள் இழுபறியில் உள்ளதாகவும், மூன்று இடங்களில் விசிக தோல்வியை தழுவும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

நாகப்பட்டினம் -அதிமுக

வானூர் - அதிமுக

அரக்கோணம் - இழுபறி

செய்யூர் தொகுதி - அதிமுக

திருப்போரூர் -இழுபறி

காட்டு மன்னார் கோவில் - விசிக எனவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது, இதில் நாகப்பட்டினம் தொகுதியில் ஆளூர் ஷா நவாஸ் மற்றும் வானூர் தொகுதியில் வன்னியரசு ஆகியோர் போட்டியிட்டனர்.

இவர்கள் இருவரும் தோல்வியை தழுவுவார்கள் என தந்தி டிவி குறிப்பிட்டுள்ளது இந்நிலையில் திருமாவளவன்,ஷா நவாஸ், வன்னியரசு, ரவிக்குமார் ஆகியோரின் தொடர் பாஜக எதிர்ப்பு, ஜாதி சாயம், இந்து மத எதிர்ப்பு ஆகிய காரணங்களே குறிப்பாக இந்து மதத்தை விமர்சனம் செய்த உங்கள் வாய் தான் கட்சிக்கு விரோதி எனவும்,விசிக தோல்வியை சந்திக்க காரணம் தலைவர் இரண்டாம்கட்ட கட்சி தலைவர்களின் பேச்சுதான் காரணம் எனவும் நிர்வாகிகள் கொ ந்தளித்துள்ளனர்.

மேலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் திருமாவளவனுக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ளது, இந்து மதத்தை விமர்சனம் செய்தது தவறாக போய்விட்டதோ எனவும், சொந்த சமுதாய வாக்குகள் கூட வரவில்லையா என வேதனை அடைந்துள்ளராம் திருமாவளவன்.

திமுக கூட்டணியில் வெறும் 6 இடங்களில் போட்டியிட்ட விசிக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெரும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்து இருப்பது விசிக நிர்வாகிகள் தலைமை ஆகியோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது, தொடர்ந்து பாஜகவை எதிர்த்து கருத்து தெரிவித்துவந்த ஷா நவாஸ், வன்னியரசு ஆகியோர் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்து இருப்பது விசிகவை மக்கள் ஏற்று கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

திருமாவளவன் பேட்டியில் எங்களுக்கு 6 MLA உறுதி என தெரிவித்த நிலையில் 6 MLA கள் உறுதியா இல்லை 6ம் தோல்வியா என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும்.