Tamilnadu

மீண்டும் நெட்டிசன்களிடம் சிக்கிய பத்மபிரியா வீட்டுக்கு வருவாங்கலாம் விதை விதைப்பாங்கலாம் ஆனால் அதை மட்டும் செய்ய கூடாதாம் !

padmapriya
padmapriya

காலநிலை போராளியாக அவதாரம் எடுத்து பின்பு மக்கள் நீதி மையம் எனும் அரசியல் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டவர் பத்மபிரியா,  சட்டமன்ற பொது தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா தோல்வியை தழுவினார், தோல்வி அடைந்த கையோடு சில நாட்களிலேயே கட்சியும் தாவினார் பத்ம பிரியா.


ஆளும் கட்சியான திமுகவில் மருத்துவர் மகேந்திரன் உடன் சென்று கட்சியில் இணைந்தார்,  அதன் பிறகு பெரிதாக வெளியில் தெரியாத 'பத்மபிரியா' தற்போது மீண்டும் தனது வேலையை காட்டியுள்ளார் முன்பு மத்திய அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கியவர் தற்போது இந்துக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்துகள் பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கோலாகலமாக கொண்டாப்படுவது வழக்கம் இந்த பண்டிகை தினத்தில் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து இனிப்புகளை பரிமாறி கொள்வது ஒவ்வொரு இந்தியர்களின் வீட்டிலும் பாரம்பரியமாக கொண்டாவது வழக்கம்.

இந்த நிகழ்ச்சியில் கடந்த சில வருடங்களாக ஒரு சில அமைப்புகள் பசுமை தீபாவளி என்ற பெயரில், பட்டாசு இல்லாமல் தீபாவளி கொண்டாடுவோம் என அறிவுரை கொடுத்து வருகின்றனர், இதன் நோக்கம் தீபாவளியை சிதைக்கும் முயற்சி, இப்படித்தான் ஜல்லிக்கட்டு தடையிலும் தொடங்கினர் என கடும் எதிர்ப்புகள் உண்டானது.

இந்த சூழலில் திமுகவில் இணைந்த பத்மபிரியா இப்போது தீபாவளி கொண்டாடும் இந்துக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் அதாவது பட்டாசு வெடிப்பது பல பின்விளைவுகளை உண்டாக்குகிறதாம், என செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் பத்மபிரியா ஆமாம் செல்போன் மூலம் தான் சிட்டு குருவிகள் அழிந்துவிட்டன என ஆய்வு முடிவுகள் வந்த பிறகு அதனை ஏன் பத்மபிரியா பயன்படுத்துகிறார் என நெட்டிசன் ஒருவர் கேட்டுள்ளார்.

ஏமா பத்மா வெடிதான் உன் கண்ணுக்கு தெரியுமா? நீ தினமும் போகிற கார், பைக் மூலம் தான் அதிகமாக சுற்று சூழல் பாதிப்பு ஏற்படுகிறது இனி நடந்து செல் என மற்றொரு நெட்டிசன் பதிலடி கொடுத்துள்ளார்., உங்களுக்கு எல்லாம் இந்துக்கள் பண்டிகையான தீபாவளி வந்தால்தான் பசுமை ஞாபகம் வரும், ஜல்லிக்கட்டு வந்தா தான் மாட்டின் மீது பாசம் வரும்.

தொழிற்சாலைகள் மூலம் கழிவை பரப்பும் ஒருத்தனையும் கேட்க மாட்டிங்க ஆனா பட்டாசு வெடித்தால் மாசு என கிளம்ப வேண்டியது, மாட்டை வெட்டி விற்பவனை கேட்க மாட்டிங்க ஆனா மாட்டை உயிராய் வளர்க்கும் ஜல்லிக்கட்டு நபர்களை கேள்வி கேட்பீங்க ஒழுங்க போயிரு என ஆவேசமாக ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் மற்றொரு நெட்டிசன்.

தீபாவளி அப்போ வீட்டிற்கு வருவாங்கலாம் விதை  விதைக்கலாமாம் ஆனால் பட்டாசு வெடிக்க கூடாதாம் ஏன் வருஷத்தில் 365 நாளில் ஒரு நாள் தான் தீபாவளி வருகிறது அந்த நாளை ஏன் குறிவைக்க வேண்டும் மற்ற நாளில் விதைகளை நட கூடாதா என்னமா ஊரை ஏமாற்றுக்கிறாய் என பலரும் பலவாறு பத்மபிரியாவிற்கு பதில்களால் பதிலடி கொடுத்து வருகின்றனர். பத்மப்ரியா பேசிய வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்