Cinema

கடும் எதிர்ப்பு நீக்கப்படுகிறதா ஜெய்பீம் திரை பட காட்சி!

actor surya
actor surya

உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களில் குறிப்பிட படும் சில விஷயங்கள் அப்படியே உண்மை என மக்களால் நம்பும் சூழல் உள்ள நிலையில், ஜெய்பீம் படத்தில் வன்னியர்களின் அக்கினி கவச அடையாளத்தை ஜெய்பீம் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் காட்சி படுத்தி இருப்பது கடும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது.


1990களில் கடலூர் மாவட்டத்தில், கம்மாபுரம் என்ற காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவர் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்டார். அவரது உடலை திருச்சி மாவட்ட எல்லையில் போலீசார் தூக்கி எறிந்து, ராஜா கண்ணு தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்தனர்.

ராஜா கண்ணுவின் மனைவி பார்வதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற சந்துரு, வக்கீலாக பணி செய்த போது இந்த வழக்கிற்காக சட்டப் போராட்டம் நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்தார்.

இந்த வழக்கை மையமாக வைத்து சினிமாவுக்காக சில புனைவு காட்சிகளுடன் இந்த ஜெய் பீம் படத்தை  கொடுத்திருக்கிறார் இயக்குனர். இந்த படத்தில் வக்கீலாக சூர்யா நடித்துள்ளார், இதில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் போலீஸ் ஒருவர் வரும் காட்சிகளில் வன்னியர் அடையாளமாக வரும் அக்கினி கலசம் குறித்து காட்சி படுத்தி இருப்பது கடும் எதிர்வினையை கொடுத்துள்ளது.

சினிமா மூலம் தொடர்ந்து ஒரு சில இயக்குனர்கள் எங்கள் சமுதாயம் குறித்து தவறாக சித்தரித்து வருவதாக வன்னியர் சமுதாய மக்கள் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் இது போன்ற காட்சிகள் இடம்பெறுவது மக்களிடம் தவறான எண்ணத்தை உண்டாக்க முயலும் என்றும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவங்களை திரைக்கதை என்ற பெயரில் தற்போது சூர்யா உட்பட சில நடிகர்கள் இயக்குனர்கள் வேண்டும் என்றே ஒற்றுமையாக இருக்கும் சமுதாயத்தில் பிளவை உண்டாக்க நினைப்பதாகவும் பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

படத்திற்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காக சாதி அடையாளம், மத அடையாளம், இந்தி பேசும் நபரை அடிப்பது போன்ற காட்சிகளை வைத்து எதிர்ப்பு மூலம் விளம்பரம் தேடும் யுத்தியை சூர்யா கையாண்டால் இனி எப்போதும் ஓடிடி தளத்தில் மட்டுமே திரைப்படத்தை வெளியிட முடியும் எனவும் தியேட்டர் பக்கம் திரைப்படம் வெளியாக விடமாட்டோம் எனவும் வன்னியர் அமைப்பை சேர்ந்த சீர்காழி கோவிந்த மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

உடனடியாக காட்சியில் இடம்பெற்ற அக்கினி கவசம் உட்பட மேலும் சில காட்சிகளை நீக்கவிட்டால் பின்விளைவை சந்திக்க வேண்டி இருக்கும் எனவும் எச்சரிகைவிடுத்து வருகின்றனர், ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சை காட்சிகள் நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில் படத்தின் தயாராப்பாளர் சூர்யா என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.