Tamilnadu

மக்களே.. இந்த மேட்டர் உங்களுக்கு தெரியுமா? இம்புட்டும் அவங்க தான் செய்யணும்!

voting
voting

வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று நகராட்சி உறுப்பினரானால் என்ன பணிகளெல்லாம் அவரால் செய்யமுடியும் ? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள்: பொது சுகாதாரம் - துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் பற்றி நன்கு அறிந்திருந்த அதற்கேற்றவாறு செயல்பட  வேண்டும்.

குடிநீர் வழங்கல் தெரு விளக்கு வசதி மற்றும் கல்வி மேம்பாடு கட்டிடங்கள் மற்றும் கட்டுவதை ஒழுங்கு செய்தல், தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுத்துவதை உரிமம் வழங்கி முறைப்படுத்துதல், பிறப்பு/இறப்பு பதிவு  மயானங்களை ஏற்படுத்தி பராமரித்தல். 

சாலை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் பராமரித்தல் பூங்காக்கள் மற்றும் கட்டிடங்கள் பராமரிப்பு மாநில, மத்திய அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துதல் இன்னும் பல... இதற்கான வருவாய் ஆதாரங்கள்: சொத்து வரி தொழில் வரி கேளிக்கை வரி விளம்பர வரி பயனீட்டாளர் கட்டணம் நிறுவனத்தின் மீதான வரி நுழைவு வரி வணிக வளாகங்கள் வாடகை பூங்காங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் வருவாய் அரசு மானியம் மாநில நிதி பகிர்வு மத்திய அரசின் திட்டங்கள் மூலமான நிதி

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தும், நகராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லோருக்கும் பொருந்தும், அவர் ஆளும் கட்சியா இல்லை எதிர் கட்சியா ? என்ற கேள்விக்கு இடம் இல்லை.உண்மையான மக்கள் நலம் விரும்பும் ஒரு வார்டு கவுன்சிலர், தனது வார்டுக்கு மட்டுமன்றி, ஒட்டு மொத்த நகராட்சியின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் பணியாற்ற முடியும்.

நகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி நிர்வாகத்தோடு இணைந்து அதனது சுய விருப்பு வெறுப்புகளை களைந்து ஊரின் வளர்ச்சிக்கு கிராம வளர்ச்சிக்கும், வார்டு மக்களின் நலனுக்கும் துணை நிற்பதே உண்மையான மக்களின் சேவகர்.

ஆளும் கட்சி வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளரும் வார்டு மக்களால்  நேரடியாக வாக்களித்துதான் தேர்வு செய்யப்படுகிறார். தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர், நகராட்சி தலைவரால் பதவிப்பிரமாணம் செய்யப்பட்டு பதவி ஏற்கிறார். அது முதல் அவர்களது பணி தொடங்குகிறது. வேறெந்த வேற்றுமையும் அவர்களுக்கிடையே இல்லை

உங்கள் தெருவில் நிற்கும் வேட்பாளர் களப்பணி செய்பவரா? நீங்க நினைத்த நேரத்தில் அவரை அணுக முடியுமா? சகோதர குணம் உடையவரா? கறை படியாத கரங்களுக்கு சொந்தகாரரா? உங்கள் பகுதி கோரிக்கைகளை நகர மன்றத்தில் உரக்க சொல்லக் கூடிய தகுதி உடையவரா?

எனப்பார்த்து வாக்களிக்களித்தால் மட்டுமே நம் தேவைகள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிறைவேறும். எனவே நாம் அனைவரும் சந்தித்து வாக்களிக்க வேண்டும். நம் வாக்களித்து வெற்றி பெற்ற நபர்கள்,மேற்குறிப்பிட்ட  வேலைகளை எல்லாம் சரிவர செய்கின்றனரா என்பதை கவனமாக பார்க்க வேண்டும்.

More Watch Videos