Tamilnadu

என்ன ஜஸ்டின்.. அன்னைக்கு மோடியை குறை சொன்னீங்க.. இன்னைக்கு உங்க மக்களே உங்களுக்கு சங்கு ஊதிட்டாங்க...அச்சோ அச்சோ!

Modi
Modi

கனடாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது குறித்து உலக அளவில் பெரும் பேசும் விஷயமாக மாறி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாடாய் படுத்தி வரும் கொரோனா நிலைமையை சமாளிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் என அந்தந்த நாடுகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.


அதன்படி இரண்டு தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தி முடிக்கும் தருவாயில் உலக நாடுகள் இருக்கின்றன. இப்படி ஒரு சமயத்தில் கட்டாய கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என கனடாவில் பிரதமர் ஜஸ்டின் தெரிவித்திருந்தார். இவரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக போர்க்கொடி தூக்க தொடங்கினர் அங்கு இருக்கக்கூடிய லாரி ஓட்டுனர்களும் பொதுமக்களும்.

குறிப்பாக அமெரிக்கா செல்லும் லாரி ஓட்டுனர்களும் அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பும் லாரி ஓட்டுநர்களும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று கனடா அரசு கடந்த மாதம் தெரிவித்து இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 29ஆம் தேதி லாரிகளுடன் தலைநகர் ஒட்டாவாவில் குவிந்து போராட்டம் நடத்தினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  திடீரென பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டதால் பாதுகாப்பான இடத்திற்கு சென்றார் ஜஸ்டின்.

இந்த நிலையில் தொடர்ந்து போராட்டம் நடைப்பெற்று வருவதால் இதனை கட்டுப்படுத்த அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த 30 நாட்களுக்கு இது அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.  மேலும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை சிறையில் அடைக்கவும் அபராதம் விதிக்கவும் காவல் துறையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் அவசர நிலை பிரகடனப் படுத்தியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். மேலும் இந்நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று மக்கள் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கின்றன. இந்த ஒரு சமயத்தில் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்திய போது அதற்கு ஆதரவாக கனடாவிலிருந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்து இருந்தார்.

ஆனால் இப்போது உள்நாட்டிலேயே அவருக்கு எதிராக மக்கள் திரும்பி இருப்பதால் போராட்டம் பெரிதும் வெடித்து இருக்கிறது. இந்த நிலைமையை சுட்டிக்காட்டி இந்திய இறையாண்மையில், குறிப்பாக உள்நாட்டு விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிட்டால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் தான் இது என்று விமர்சித்து வருகின்றனர்.

More watch videos