தனியார் பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஒன்றில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து தவறான கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்வது போன்ற ஒரு காட்சி ஒளிபரப்பட்டது , தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குழந்தைகள் உட்பட பலர் பங்கு பெரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இதனை குழந்தைகள் இளைஞர்கள் நடுத்தர வயதுடையோர் என பலர் பார்வையிட்டு வருகின்றனர் பொழுது போக்கு நிகழ்ச்சியான இதில் அரசியல் சார்ந்த செயல்களும் இடம்பெற்று இருப்பது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, பிரதமர் மோடி பணமதிப்பு இழப்பு செய்யப்பட்டதன் பயன்களை மறைத்து அதனை அப்படியே முட்டாள் தனம் என நகைச்சுவையாக விமர்சனம் செய்துள்ளனர்.
மேலோட்டமாக நகைச்சுவையாக தெரிந்தாலும் இது அரசியல் சார்பற்ற பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது, இதற்கு பாஜகவினர் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர், இந்த சூழலில் இந்த விவகாரம் குறித்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் முக்கிய தலைமை பொறுப்பில் உள்ள நபரை தொடர்பு கொண்டு விவரம் குறித்து கருத்து கேட்டு இருக்கிறார்.
மும்பையில் உள்ள அந்த நபர் உடனடியாக தமிழகத்தில் உள்ள நிர்வாக இயக்குனரை தொடர்பு கொண்டு விவரத்தை அறிய விஷயம் உண்மை என தெரியவந்துள்ளது, இந்த சூழலில் இப்படி ஒரு காட்சியை வடிவமைத்த நபர் திராவிட சித்தாந்தம் கொண்ட நபர் என்பதும் திட்டமிட்டு காட்சியை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து உடனடியாக அந்த குழுவே இரண்டு நாட்களில் முழுவதுமாக சேனலில் இருந்து வெளியேற்ற படுவார்கள் என்று உறுதி அளித்து இருக்கிறார், மேலும் அந்த சேனலில் கரு பழனியப்பனும் விரைவில் வெளியேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் மத்திய இணை அமைச்சர் முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இந்த விவகாரத்தில் முழு கவனம் செலுத்தி வருவதால் மேலும் சில அதிரடி மாற்றங்கள் அரங்கேறலாம் என்றும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(பின்குறிப்பு - ஒட்டுமொத்த குழு என்பது நிகழ்ச்சியில் நடித்த நடிகர்களோ அல்லது நடுவர்களோ அல்ல அரசியல் ரீதியாக நிகழ்ச்சியை உருவாக்கிய இயக்குனர்.. மேற்பார்வையை முறையாக செய்யாத நிகழ்ச்சி பொறுப்பாளர் பின்னணியில் இருக்கும் தொழில்நுட்ப அணி ஆகியோர் + )