Cinema

"போட்டு தாக்கு" இனி தமிழ் சினிமாவில் மோடி எதிர்ப்பு இருக்காது.....பரபரப்பு பின்னணி..!

Modi
Modi

புதுப்புது மாற்றங்கள் நாளுக்குநாள் அரங்கேறி வருகின்றன அந்த வகையில் தற்போது மற்றொரு தகவல் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது, இனி வெளியாகும் திரைப்படங்களில் அரசியல் சார்பு இல்லாமல் வெறும் பொழுதுபோக்காக எடுக்க வேண்டும் என முன்னணி நடிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனராம்.


இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது ஒன்று அரசியல் பேசும் சினிமாக்களுக்கு தமிழகத்தில் வரவேற்பு இல்லாமல் போய் விடுகிறது மேலும் அரசியல் பேசிய நடிகர்கள் பெரும் அரசியல் ரீதியான சிக்கலை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது, நடிகர்கள் விஜய், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி என பலரும் தங்கள் திரைப்படங்களில் சிறு சிறு அரசியல் வசனங்கள் மூலம் மத்திய அரசுக்கு குறிப்பாக பிரதமர் மோடிக்கு எதிராக காட்சிகளை அமைத்திருப்பர்.

அவர்களின் கணக்கு தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் போன்றவர்கள்  மோடியை விமர்சனம் செய்தால் தமிழகத்தில் படத்தை ஓட்டி விடலாம் அல்லது இலவச விளம்பரம் கிடைக்கும் என்ற கணக்கில் அது போன்று பிரதமர் மோடியை விமர்சனம் செய்யுமாறு சில காட்சிகளை அமைத்து இருந்தார். ஆனால் நாளடைவில் அந்த ஹீரோக்களின் படங்களும் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவும் வண்ணம் அமைந்துள்ளன.

குறிப்பாக ஜெய் பீம், சூரரைப்போற்று போன்ற OTTயில் ரிலீசான சூர்யாவின் படங்கள் நல்ல வரவேற்பையும் மக்களிடம் நல்ல ரிசல்டை கொடுத்தது,. இதனை எதிர்பார்த்து சூர்யாவும் எதற்கும் துணிந்தவன் படத்தை தியேட்டரில் செய்தார் ஆனால் எதிர்பார்த்த எந்த வருமானத்தையும் அல்ல திரைப்படம் கொடுக்கவில்லை மாறாக மிகப்பெரிய தோல்வியாக அமைந்துள்ளதாக திரை விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

போதாத குறையாக சூர்யா மத்திய அரசு மற்றும் சில இந்து அமைப்புகளுடன் சிக்கி சிதைந்து வருகிறார் பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பையும் சம்பாதிப்பது, தனது கேரியரை பின்னாளில் வாய்ப்புகள் ரொம்ப குறைவாக இருக்கும் என கணக்கிட்டு தற்போது அரசியல் சார்பு இல்லாத கிராம பாங்கான படங்களை தேர்வு செய்ய சூர்யா முடிவு செய்துள்ளாராம்.

இப்படி அரசியல் ரீதியாக வசனங்களும் வெளியில் அரசியல் பேசும் நடிகர்களும் தொடர் தோல்வியை தழுவி வரும் வேளையில் தற்போது மற்றொரு மாற்றம் ஒன்று அரங்கேறியுள்ளது தமிழகத்தை சேர்ந்த மத்திய இணையமைச்சர் முருகன் திரைத்துறை சார்ந்த பிரபலங்களை கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு சந்தித்து பேசினார் அப்போது அவரிடம் திரைத்துறை சார்பான பல முக்கிய விவகாரங்களில் மத்திய அரசிடம் பெற வேண்டிய உதவிகள் குறித்து மூத்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் போன்றவர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் அமைச்சர் முருகனும் தன் பங்கிற்கு பிரதமர் மோடி எப்போதும் திரைத்துறை சார்ந்த நபர்களுக்கு உறுதுணையாக தான் இருக்கிறார் அவர் யாரையும் தனிப்பட்ட முறையில் எந்தவித பழிவாங்கும் நடவடிக்கைக்கு உட்படுத்தியது இல்லை தமிழகத்தில் இதே விமர்சனத்தை ஆளும் கட்சிகள் மீது வைத்து இருந்தால் உங்கள் நிலைமை என்னவாக இருந்திருக்கும் ஆனால் அனைத்து ஆட்சி அதிகாரம் கையில் இருந்தாலும் மத்திய அரசும் பிரதமரும் மத்திய அரசை சார்ந்தவர்களும் யாருமே இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழக திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் ஈடுபட்டது இல்லை இதற்கு காரணம் மோடியின் பெருந்தன்மை என குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொழுதுபோக்கு திரைப்படங்களையும், நடிகர்களையும் விமர்சனம் செய்ய வேண்டாம் எனவும் உண்மையை தவறாக பேசும் படத்தினை மட்டும் விமர்சனம் செய்யலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார். இவற்றிற்கு பிறகு பல முன்னணி நடிகர்கள் குறிப்பாக முக்கிய அந்தஸ்தில் உள்ள நடிகர்கள் பலர் பாஜக தலைவர்களை தொடர்பு கொண்டு நாங்கள் இனி வரும் திரைப்படங்களில் விமர்சனம் செய்ய மாட்டோம் எனவும் உறுதிமொழி கொடுத்து உள்ளனராம்.

மேலும் பாஜக சார்பிலும் தங்கள் திரைப்படங்களுக்கு எந்தவித இடையூறும் எங்களால் உண்டாகாது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இது ஒருபுறம் என்றால்  முக்கிய காரணமாக பார்க்க வேண்டியது  சென்சார் செய்து வெளியாகும் திரைப்படங்களை மத்திய அரசு நினைத்தால் மறுதணிக்கை செய்யலாம் என மத்திய அரசு விதிகளில் மாற்றம் செய்தது இதுதான் பல நடிகர்களின் அடி வயிற்றை கலக்கி உள்ளதாம்.

மத்திய அரசை வீணாக பகைத்துக் கொள்ள வேண்டும் மேலும் ஏன் நமது படத்திற்கு எதிர்ப்பை சந்திக்க வேண்டும்  எனவும் முடிவு செய்துள்ளனராம், இனி தமிழகத்தில் மத்திய அரசை குறிப்பாக பிரதமர் மோடியை எதிர்க்க வேண்டாம் என பலர் முடிவு செய்து இருப்பதால் இனி திரைப்படங்களில் மாற்றங்கள் உண்டாகலாம் என்று கூறப்படுகிறது.