Cinema

பிரேம்ஜி நடிக்கிறதுக்கு இவருதான் காரணமா!! அப்படி என்ன ஒளி வட்டத்தை சிம்பு பார்த்துருப்பாரு.....?

Simbu
Simbu

தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக வலம் வந்தாலும் இசையில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றவர் தான் கங்கை அமரன் மகன் பிரேம்ஜி. பிரேம்ஜி என்றாலே அவரது ஃபேமஸ் டயலாக்கான என்ன கொடுமை சார் இது? எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா! என்ற இரண்டு டயலாக் தான் ஞாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு இந்த இரண்டு டயலாக்காலே மிகவும் ஃபேமஸானவர். அதோடு ஒரு படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார் என்றால் அந்த படத்தில் நிச்சயம் அவரது சகோதரர் பிரேம் ஜி இடம்பெறாமல் இருக்க முடியாது. இதனை பலரும் நகைச்சுவையாகவும் விமர்சித்து வந்துள்ளனர். அதோடு வெங்கட் பிரபு ஒரு கதையை எழுதுகிறார் என்றால் நிச்சயமாக அதில் பிரேம்ஜிக்கு என்று ஒரு தனி கதாபாத்திரத்தையே உருவாக்கி வைத்திருப்பார் என்ற பல விமர்சனங்கள் இதற்கு முன் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமாக இருந்த பிரேம்ஜியின் திட்டம் பாதியிலேயே கைவிடப்பட இசையில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். 


மேலும் திரைப்பட இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து இசையமைப்பில் ஈடுபட்டு வந்த பிரேம் ஜி யுவன் சங்கர் ராஜாவின் பெரும்பாலான பாடல்களின் ராப் பகுதிகளில் பாடிவந்துள்ளார். இதனை அடுத்து 2006 ஆம் ஆண்டு வல்லவன் திரைப்படத்தின் மூலம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பிறகு தனது சகோதரர் இயக்கும் அனைத்து திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார் பிரேம்ஜி! அந்த வகையில் சென்னை 600028 என்ற திரைப்படத்தில் சீனு என்ற கேரக்டரில் நடித்து மிகவும் பிரபலமானார் மேலும் மங்காத்தா மற்றும் சேட்டை ஆகிய படங்களிலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார். 

இந்த இரண்டு படங்களுக்கு முன்பாகவே கோவா என்ற திரைப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒரு கதாநாயகனாக நடித்து சில ரசிகர்களையும் பெற்றார், இருப்பினும் இந்த படத்தில் அவருக்கு என்று ஒரு தனி காதல் ஸ்டோரி மற்றும்  லவ் சாங் இருக்கும் அது இன்றளவும் காமெடி சீன்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இது மட்டும் இன்றி பாடகர் சுரேஷ் பீட்டர்சுடன் இணைந்து மைக்கேல் ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தி ஒன் கீதம் என்ற பாடலை இயற்றினார். இந்த நிலையில் பிரேம்ஜி முதன் முதலாக தனது இசை பாதையில் இருந்து எப்படி சினிமாவிற்குள் ஒரு நடிகராக அறிமுகமானார் என்பது குறித்த ரகசியத்தை பொதுவெளியில் கூறியுள்ளார்.

அதாவது தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜாவின் அசிஸ்டன்ட் ஆக மன்மதன் திரைப்படத்தில் வேலை பார்த்த பொழுது சிம்பு அடிக்கடி இசையமைக்கும் இடத்திற்கு வந்து செல்வார் அப்பொழுது என்னை பார்த்து உன்னை பார்க்கும் பொழுதே டிஃப்ரண்டாக இருக்கிறது ஒரு காமெடி லுக் உன்னிடம் இருக்கிறது அதனால் நீ நடிக்க வேண்டும் என்று கூறினார், இருந்தாலும் அது எனக்கு சரியானதாக தோன்றவில்லை மேலும் என்னால முடியாது நிறைய கேமரா இருக்கும் நிறைய பேர் பார்ப்பாங்க என்னால முடியவே முடியாது என்று மறுத்து விட்டேன் ஆனால் சிம்பு, அடுத்து இயக்கி நடிக்க உள்ள வல்லவன் திரைப்படத்தில் ஹீரோயினின் நண்பன் ரோலில் நடிக்கும் படி வற்புறுத்தினார். அதுமட்டுமின்றி வல்லவன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது என்னை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு சென்று வல்லவன் திரைப்படத்தில் என்னை நடிக்க வைத்தார் என்றும் பிரேம்ஜி கூறியுள்ளார் இது தற்போது இணையத்தில் படுவைரலாக்கி வருகிறது.