Cinema

எழுந்துள்ளது.அடிக்கு மேல் அடி!!! மீண்டும் பிரச்சனையில் சிக்கிய youtube பிரபலம்!!!

ttf vasan
ttf vasan

யூடியூப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களில் தற்போது அதிக அளவில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் தொழில் ரீதியாக பல வகையான வீடியோக்களை பதிவு செய்து அவர்களின் இணையதள பக்கங்களில் பதிவிட்டு தொழில்களை விரிவு செய்கின்றனர். மேலும் சிலர் பொழுதுபோக்கிற்காக டான்ஸ் ஆடுவது, காமெடி செய்வது என்று ரீல்ஸ் போன்றவற்றை தொடர்ந்து செய்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரு youtube சேனலை தொடங்கி அதில் பைக் சாகசங்களை புரிந்து 2k கிட்ஸ்களின் மனதில் இடம் பிடித்து அதிக அளவில் ரசிகர்களை பெற்று வந்த ஒரு யூட்டுபராக இருந்து வந்தவர் தான் டிடிஎப்  வாசன்!! 


முதலில் youtube  போன்றவற்றில் வீடியோக்களை பதிவு செய்து அதிக அளவில் வரவேற்பை பெற்று அதன் பிறகு சோசியல் இன்புளுயன்சராகவும் இருந்து வந்தார். காலையில் செல்பவர்களுக்கு  ஏதாவது உதவி தேவைப்பட்டால் அவற்றை செய்தி கொடுத்து அதனையும் வீடியோவாக எடுத்து தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இவர் இவ்வாறு பல உதவிகளை செய்து வருவது முதலில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதனை தொடர்ந்து தனது பிறந்தநாள் அன்று தனது ரசிகர்களை சந்திப்பதற்காக சென்றிருந்தபோது  அங்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இவரின் ரசிகர்கள் கூடி அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இவருக்கு இவ்வளவு ஃபேன்ஸ் இருக்கிறார்கள் என்பது அன்று தான் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து  அடுத்தடுத்து இவருக்கு பல பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருந்து வருகிறது. 

டூவீலர் ஓட்டும்பொழுது பல சாகசங்களை செய்து அனைவருக்கும் தப்பான உதாரணமாக இருந்து வருகிறார் என்று பலர் இவர் மீது குற்றம் கூறி வந்தனர். மேலும் டூவீலர் ஓட்டும் பொழுது விபத்து ஏற்பட்டு அதனால் அவரின் லைசென்ஸ் தற்போது தடை செய்யப்பட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்திருப்போம். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் சென்னையில் உள்ள மதுரவாயில் என்னும் டூவீலர்களின் ஸ்பேர் பார்ட்ஸ் வைக்கும் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அதில் சமீபத்தில் அதிக ஒலி எழுப்பக்கூடிய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள  சைலன்சார்களை விற்பனை செய்து வருவதாக பிரதமரின் அலுவலகத்திற்கு புகார் அனுப்பப்பட்டதை தொடர்ந்து இவரின் கடைக்கு நோட்டீஸ் அனுப்பி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு தொடர்ந்து பல பிரச்சனைகளில் மாட்டி வரும் ttf வாசன் தற்பொழுது மீண்டும் ஒரு புதிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டு உள்ளார்!! அது என்ன பிரச்சனை என்பது குறித்து விரிவாக காணலாம்!!

 ஏற்கனவே டிடிஎஃப் மீது பல வகையான புகார்கள் எழுந்த வண்ணமே இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரின் லைசென்ஸும் கேன்சல் செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது கார் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை பார்ப்பவர்கள் லைசன்ஸ் கேன்சல் செய்யப்பட்ட நிலையில் எப்படி கார் ஓட்டலாம் என கேள்விகள் எழுப்பி வந்தனர். இதனைத் தொடர்ந்து கார் ஓட்டுவதற்கு லைசன்ஸ் வாங்கி இருப்பதாகவும், தமிழ்நாட்டில் பல கேசுகளில் மாட்டி இருப்பதால் வேறு மாநிலங்களில் இருந்து லைசன்ஸ் உரிமையை பெற்று இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் அந்த வீடியோவில் செல்போன் பேசியவாறு கார் ஓட்டியது சமூக வலைதளங்களில் அதிக அளவில் விமர்சனங்கள் எழுந்ததோடு TTF ஹாசன் மீது போலீஸார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றன. எனவே தொடர்ந்து பல பிரச்சினைகளை மாற்றிய டிடிஎஃப் தற்பொழுது போன் பேசிக்கொண்டு கார் ஓட்டியதால் மீண்டும் பிரச்சனைகள் மாற்றியுள்ளார். இது குறித்த செய்தி தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இதுமட்டுமில்லாமல் இந்த விவகாரம் மேலும் சட்ட ரீதியில் வாசனை சிக்கவைக்கும் என தெரிவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது...