Cinema

40 வயதாகியும் கல்யாணம் பண்ணிக்காத ஹீரோயின்!!! இவங்க கூட பிரேக் அப் ஆ??

Trisha
Trisha

தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருவதோடு மட்டுமல்லாமல் தி டைம்ஸ் ஆப் இந்தியா தரவரிசையிலும் சிறந்த நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்து உள்ளவர் தான் நடிகை த்ரிஷா கிருஷ்ணன்!! 1999 ஆம் ஆண்டில் மிஸ் சென்னை போட்டியில் வெற்றி பெற்று அதன் பிறகு சினிமாவில் நடிப்பதற்கு துவங்கினார். முதலில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்த த்ரிஷா 2019 முதல் கட்டா மீத்தா என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தி மொழியிலும் அறிமுகமானார். தமிழில் 2002 ஆம் ஆண்டில் மௌனம் பேசியதே என்னும் திரைப்படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடித்திருந்தார். 


அதன் பிறகு தொடர்ந்து வெளியான கில்லி, ஆறு போன்ற திரைப்படங்கள் இவருக்கு வெற்றியை தேடி கொடுத்தது. அந்தத் திரைப்படங்களுக்கு பிறகு இவருக்கு ரசிகர்களும் அதிக அளவில் உருவாகினர். அதன் பிறகு அபியும் நானும் என்ற திரைப்படத்தில் பிரகாஷ் ராஜிக்கு மகளாக நடித்து அனைவரின் வரவேற்பையும் பெற்றார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, கொடி, 96 மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களில் நடித்து மேலும் புகழைப் பெற்றார். சமீபத்தில் கூட விஜயுடன் சேர்ந்து லியோ திரைப்படத்தில் நடித்து சூப்பர் ஹிட் ஆனது. இவ்வாறு சினிமாவிற்கு வந்தது முதல் இருந்து இன்று வரையிலும்  தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று "தென்குயின்" என்று போற்றப்பட்டு வருகிறார்.

மேலும் ரஜினி விஜய் அஜித் போன்ற பல பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களையும் கொடுத்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து சினிமா துறையில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து அதிக ஆண்டு நடிக்கும் ஹீரோயின்களில் இவரும் ஒருவராக இருந்து வருகிறார். எனினும் த்ரிஷாவிற்கு தற்போது 40 வயதிற்கு மேல் ஆகியுள்ள நிலையில் இன்னும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன்?? என்று பலரும் நினைத்து வருகின்றனர்!! மேலும் ஏற்கனவே திரிஷாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நிறுத்தப்பட்டது குறித்து தற்பொழுது செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அது குறித்து விரிவாக காணலாம்!!

நடிகை திரிஷாவிற்கு தற்பொழுது 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்றும் ஆனால் இன்னும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என பல சர்ச்சைகள் தற்பொழுது வெளியாகி வருகிறது. ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டில் தயாரிப்பாளர் வருண்மணியை திரிஷா காதலித்து அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதனால் இவர்களின் திருமணமும் நின்று விட்டது. அதன் பிறகு பாகுபலி நடித்த நடிகர் ராணா டகுபதியுடன் திரிஷா காதலில் உள்ளார் என்று கிசுகிசுகள் அதிக அளவில் பரவி வந்தது. 


மேலும் இவர்கள் இருவரும் பல விருது நிகழ்ச்சிகளில் கூட ஒன்றாக கலந்து வந்தனர். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவி வந்தது. ஆனால் நாளடைவில் இருவரும் பிரிந்து விட்டனர் என்றும் அதன் பிறகு நடிகர் ராணா வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறுகின்றனர். இப்படி 40 வயதிற்கும் மேலாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று பலர் விமர்சித்து வந்தாலும் கூட மேலும் சிலர்  இன்னமும் எப்படி இவ்வளவு வயதாகியும் கூட த்ரிஷாவிற்கு அழகு குறையவே இல்லை என்றும் கூறி வருகின்றனர். தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.