Cinema

RRR.. படம் குறித்த "விமர்சனம்".. இந்திய அளவில் வாங்கி கட்டும் புதிய தலைமுறை...! பாவம்..!

Rrr movies
Rrr movies

இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பாகுபலி அதன் இயக்குனர் ராஜமவுளி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் R-R-R, இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர்.


டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்த படத்தைத் தயாரித்துள்ளது.தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. 'ஆர் ஆர் ஆர்' படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படம் இன்று உலகம் முழுவதிலும் ஒரே சமயத்தில் வெளியாகியுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமராம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியிருந்த இப்படம் குறித்து படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

ராஜமவுலியின் பிராமண்டம் இந்த படத்திலும் அருமையாக அமைந்துள்ளதாக கருத்துக்கள் பரவலாக பரவி வருகிறது, இது ஒருபுறம் என்றால் "RRR" கதையை தமிழகத்தில் பொதுமக்கள் வரவேற்றும், பாகுபலி ரசிகர்கள் கொண்டாடியும் வருகின்றனர் ஆனால் அதே நேரத்தில் பெரியாரிஸ்ட்களும் சில முன்கள பத்திரிகையாளர்களும் கதறி வருகின்றனர்.

குறிப்பாக "RRR"  படத்தில் ராமர் குறித்தும் இந்து மத வழிபாடுகளை முதன்மை படுத்தும் வகையில் அமைந்துள்ளதால் பல பெரியாரிஸ்ட்கள் காழ்புணர்ச்சியில் திரைப்படம் குறித்து தகவலை பரப்பி வருகின்றனர் இந்த சூழலில் தமிழகத்தை சேர்ந்த ஊடகமான புதிய தலைமுறை RRR திரைப்படம் குறித்து எழுதிய விமர்சனம் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

புதிய தலைமுறை தனது வலைத்தளத்தில் RRR படம் விமர்சனம்:  ஆயுதம் தாங்கிய ஆங்கிலேயப் படையினை ராமாவதாரம் எடுத்தது போல ராம் சரண் வில்லும் அம்புமாக வந்து இந்துமதக் கடவுள் ராமனின் வேஷமிட்டு அம்பெய்தி வீழ்த்துவதெல்லாம் என்ன வகையான லாஜிக்.? எந்த தரப்பை திருப்திப் படுத்த இப்படியான காட்சி? இதற்கெல்லாம் ராஜமெளலி பதில் சொல்லவேண்டும் என குறிப்பிட்டு இருந்தது.

இதற்கு நெட்டிசன்கள் வெளுத்து எடுத்து வருகின்றனர் குறிப்பாக ஜெய்பீம் படத்தில் உண்மையை மாற்றி சாதி குறியீட்டை வைத்து ஒரு சமூகத்தையே உண்மை சம்பவம் என்ற பெயரில் குற்ற உணர்விற்கு ஆளாக்கி இருந்தார்கள் ஆனால் பொழுது போக்கு திரைப்படத்தில் லாஜிக் கேட்கிறார்கள் அதிலும் ராஜாமௌலி இவர்களுக்கு பதில் சொல்லவேண்டுமாம் ஏன் இந்த வேலை புதிய தலைமுறைக்கு என நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகிறார்கள்.

ஏன் சூரரை போற்று திரைப்படம் ஒரு பிராமணர் கதை அதில் சம்பந்தமே இல்லாமல் பெரியாரை காட்டினார்கள் அப்போதெல்லாம் புதிய தலைமுறைக்கும் அதன் ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கும் லாஜிக் தெரியவில்லையா என பங்கமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தனது திரைப்பட விமர்சனம் மூலம் இந்திய அளவில் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது புதிய தலைமுறை  ஆமாம் ராமருக்கு பதில் பெரியார் முகத்தை காட்டி இருந்தால் வாயை மூடி வேடிக்கை பார்ப்பார்களோ என பலரும் காதுபட பேசுவது கேட்க முடிகிறது.