Cinema

"RRR"... படத்தை எதிர்த்து களத்தில் குதிக்கிறாரா? வீரமணி பெரியாரிஸ்ட்கள் ஆவேசம்...!

veramani and rrr film
veramani and rrr film

பிரமாண்ட இயக்குனர் ராஜமவுளி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் R-R- R, இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர்.


டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்த படத்தைத் தயாரித்துள்ளது.தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. 'ஆர் ஆர் ஆர்' படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படம் இன்று உலகம் முழுவதிலும் ஒரே சமயத்தில் வெளியாகியுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமராம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியிருந்த இப்படம் குறித்து படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

ராஜமவுலியின் பிராமண்டம் இந்த படத்திலும் அருமையாக அமைந்துள்ளதாக கருத்துக்கள் பரவலாக பரவி வருகிறது, இது ஒருபுறம் என்றால் RRR கதை பெரியாரிஸ்ட்களை கதி கலங்க செய்துள்ளது, கிளைமாக்ஸ் காட்சியில் ராம் சரண் ராமர் போன்று வருவதும் திரைப்படம் முழுவதும் ராமராஜ்யம் போன்றும் ஆங்கிலேயர்களை எதிர்த்தும் இருப்பது பெரியாரிஸ்ட்கள் கொள்கைக்கு எதிராக இருக்கிறது.

தற்போது படத்தை பார்த்த பலரும் வீரமணி போன்றோர் இந்த திரைப்படத்தை பார்த்தால், படத்தை தடை செய்யக்கோரி வீதியில் குதித்தாலும் ஆச்சர்யம் இல்லை என பரவலாக பேசி வருகின்றனர், இதற்கிடையில் நெட்டிசன்கள் முகநூலில் ஆசிரியர் வீரமணி என்னும் பக்கத்தை TAG செய்து ஆகா வீரமணி போராட்டத்தில் குதிக்கிறாரா எனவும் கிண்டலடித்து வருகின்றனர்.

மொத்தத்தில் RRR திரைப்படத்தின் பிராமண்டம் திரையில் பார்த்தால் புரியும் படம் மிகவும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.