
1997-ல் பழம்பெரும் நடிகர் வி.கே ராமாசாமி சில காலகட்டங்களில்இவரது உடல்நிலை சரி இல்லாமல் போகும் நிலையில் ஒரு நாள் வி.கே ஆர். விமான பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த சமயத்தில் அதே விமானத்தில் வந்த ரஜினிகாந்த் மற்றும் வி.கே ஆர். சந்தித்துள்ளனர். இந்த நிலையில் வி.கே ஆர். எனக்கு ஒரு படம் பண்ணி தாங்க அப்படின்னு ரஜினியை பார்த்து கேட்டிருக்காங்க!! அதற்கு ரஜினியும் கண்டிப்பாக பண்ணி தரேன் அப்படின்னு சொல்லியுள்ளார். அதன் பின் காலங்களும் ஓடிக்கொண்டே தான் இருந்திருக்கிறது. மேலும் ரஜினி பக்கத்தில் இருந்து எந்த ஒரு பதிலும் அதற்கு அடுத்து வரவில்லை. மேலும் வி.கே ஆர். ரஜினி தன்னை தயாரிப்பாளராக தான் ஆக்கவில்லை என்றாலும் அவரது தடங்களில் நடிக்க தனக்கு வாய்ப்பு கொடுப்பதை அமைத்து சந்தோஷப்பட்டு தொடர்ந்து நடித்துக் கொண்டு வந்துள்ளார். இதற்கிடையில் பத்திரிக்கையாளர் நண்பர் ஒருவர் வி.கே ஆர். சந்திப்பதற்கு அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
இருவரும் அமர்ந்து எப்போதும் போல் சகஜமாக பேசிக் கொண்டிருந்தனர். தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது எப்படி ரஜினி படத்தில் தொடர்ந்து நடிக்கிறீர்கள் என்று கேட்டார். அப்போதுதான் அவரிடம் தான் தயாரிப்பாளராக ஆசைப்பட்டதை இந்த பத்திரிக்கை நண்பரிடம் கூறினார். அது பெரிய விஷயம் என்றாலும் என் வாழ்க்கையில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜிக்கு அப்புறம் என்னுடைய உயிர் காத்த ஒரு பெரிய உத்தமர் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். இதைக் கேட்ட பத்திரிக்கையாளர் ரஜினி காந்தை இப்படி சொல்றாரே அப்படின்னு மிகவும் வியப்பாக கேட்டுக்கொண்டிருந்தார். மேலும் அந்த பத்திரிக்கையாளரை தனது பூஜை அறைக்கு அழைத்துச் என்றார் வி.கே ஆர். அவரின் பூஜையறையை பார்வையிட்ட பத்திரிக்கையாளர் கடவுள்கள் அனைத்தையும் அந்த பூஜையறையில் இருப்பதை பார்வையிட்டார் அதற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம் ஒன்று இடம்பெற்றிருந்ததை கண்டு வியப்படைந்தார். என்னவென்று கேட்டபோது வி.கே ஆர். எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு என் வாழ்க்கையில் மீட்டெடுத்து கொடுத்த கடவுள் இவர்தான் என்று கூறினார். நான் உடல்நலம் இல்லாமல் இருந்திருந்தாலும் இன்றைக்கு இந்த அளவுக்கு தெம்பாக இருப்பதற்கு காரணம் ரஜினிகாந்த் மட்டுமே அவர் செய்த உதவி மட்டும் தான்.
நான் தயாரிப்பாளராக ஆக வேண்டும் என்று ரஜினிகாந்திடம் கேட்டு 15 வருடங்கள் கடந்த நிலையிலும் அவருக்கு இருந்த பரபரப்பான நிலையிலும் வேலையிலும் அதைப் பற்றி மறந்திருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அதைத் தொடர்ந்து எனக்கு படத்தில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டுதான் இருந்தார். மேலும் திடீரென்று ஒரு நாள் செய்தித்தாளை பார்க்கும் பொழுது அதில் அருணாச்சலம் படம் தயாரிப்பதற்கான தயாரிப்பாளர்களின் பட்டியலில் எட்டு தயாரிப்பாளர்களின் பெயரில் என்னுடைய பெயரும் ஒன்று இடம்பெற்று இருந்ததை கண்டு வியப்படைந்தேன். ரஜினிகாந்திடம் எப்பயோ கேட்டதை ஞாபகம் வைத்து இப்போது வாய்ப்பு தந்துள்ளார் என்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மேலும் அந்தப் படத்திற்கான தயாரிப்பாளராகிய நான் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை!! ஆனால் ரஜினிகாந்த்தும் அதைப்பற்றி ஒன்றும் கேட்கவும் இல்லை!!! அதுமட்டுமில்லாமல் அந்த படத்தில் எனக்கு ஒரு நடிப்பதற்கான வாய்ப்பையும் தந்தார்.
அந்தப் படத்தில் கதாபாத்திரமாக நடிப்பதற்கான சம்பளத்தையும் எனக்கு தந்தார். மேலும் படம் வெற்றி ஆனதை தொடர்ந்து ஒரு நாள் என்னை அழைத்து தயாரிப்பாளராக்கிய எனக்கு 25 லட்சம் கொடுத்து என்னுடைய வறுமையை போக்கினார். இதைக் கண்டு நான் மிகவும் நெகிழ்ந்து விட்டேன். ஏனெனில், தயாரிப்பாளராக எனக்கொரு வாய்ப்பு கொடுத்து, அந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒரு கதாபாத்திரமும் கொடுத்து, படம் வெற்றி ஆனவுடன் அதற்கான பங்கையும் கொடுத்து என்னை ஒரு பெரிய இக்கட்டான நிலையில் இருந்து மீட்டெடுத்தார். எனவே தான் என் பூஜையறையில் ரஜினியின் படத்தை வைத்து வணங்குகிறேன் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் வி.கே ஆர். கூறியது தற்போது இணையத்தில் விமர்சிக்கப்பட்டு அதிகம் பகிரப்பட்டு வருகிறது...