
தற்போது உள்ள காலகட்டங்களில் புது முகங்கள் சினிமாவிற்கு வருவதையும் பிரபலமாவதையும் தங்கள் விருப்பங்களாக கொண்டுள்ளனர். அதன்படியே இன்ஸ்டாகிராம், youtube மற்றும் பேஸ்புக் களில் அதிக அளவில் கணக்குகள் உருவாகி, அதன் மூலம் தனது நடிப்பு திறமைகளை வெளிப்படுத்துபவர்களும் அதிகமாகி கொண்டேதான் இருக்கிறார்கள்.இதைத்தொடர்ந்து தெலுங்கு திரைப்பட உலகில் album songs, குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் மிகவும் குறைந்த பட்ஜெட் கொண்ட படங்களில் நடித்து வந்த நடிகையான சௌமியா ஷெட்டி மிக பிரபலமான நடிகை. சௌமியா ஷெட்டி நடித்துள்ள சமீபத்திய படம் யுவர்ஸ் லவ்விங்லி. மேலும் இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராமிலும் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகையாகவும் உள்ளார். என்னதான் பரதநாட்டியம் கற்றுக்கொண்டவராக இருந்தாலும், தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் அதை கவர்ச்சி மிகுந்த வீடியோக்களும், புகைப்படங்களையே அவர் பதிவிட்டு வந்துள்ளார். இதனாலேயே இந்த நடிகைக்கு ரசிகர் கூட்டங்கள் மிகுந்த அளவில் உள்ளனர்.
இந்த நிலையில் இவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், இவர் அவரது தோழி வீட்டில் செய்த திருட்டு பற்றிய செய்தியே வெளிவந்துள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாகி கொண்டு உள்ளது. அது என்னவென்றால்!!பிரபல சமூக ஊடக நட்சத்திரமும், வளர்ந்து வரும் தெலுங்கு நடிகையுமான சௌமியா கில்லம்பள்ளி என்றும் அழைக்கப்படும் சௌமியா ஷெட்டி, தங்கம் திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் விசாகப்பட்டின போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சௌமியாவுக்கு instagram அக்கவுண்டில் பெண் தோழி கிடைத்துள்ளார். அடிக்கடி அந்தப் பெண் வீட்டிற்கு செல்லும் பழக்கத்தை கொண்ட நடிகை சௌமியா சில நாட்களில் நெருங்கிய தோழியாகவும் மாறி உள்ளார். அதோடு தோழி தானே என்று மௌனிகாவின் குடும்பம் கண்டுகொள்ளாமல் இருக்க நடிகை சௌமியா அவர்கள் வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகளை கணக்குப் போட்டு யாருக்கும் சந்தேகம் வராத அளவிற்கு கனகச்சிதமாக திருடியதாக சொல்லப்படுகிறது.
அதாவது பிப்ரவரி 23 அன்று தொண்டபர்த்தியில் உள்ள பாலாஜி மெட்ரோ ரெசிடென்சியில் நடந்த ஒரு சம்பவத்தில் அவர் குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறப்படுகிறது.150 டோலா தங்க ஆபரணங்கள் திருடப்பட்டதாக, தோழியின் தந்தையும், ஓய்வுபெற்ற இந்திய தபால் துறை ஊழியரும் ஆன பிரசாத் பாபு புகார் அளித்தார், இது குறித்து விசாரிக்கையில் மௌனிகாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் யார் யார் என விசாரிக்க போலீஸ் ஆரம்பித்தனர்.போலீசார், கைரேகைகளை சேகரித்து, குடியிருப்பில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பதினொரு நபர்கள் சந்தேகத்தின் பேரில் சௌமியா ஷெட்டி உட்பட மூன்று சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க வழிவகுத்தது. இதில் சௌமியா செட்டி பெயரும் சிக்கியுள்ளது.
மேலும் நகைகளை திருடிய இதிலிருந்து மௌனிகா வீட்டிற்கு நடிகை சௌமியா வருவதையும் முழுவதும் நிறுத்தி விட்டுள்ளார். இது போலீஸ் விசாரணையைத் தூண்டியது. இதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு கிலோ தங்கத்தையும் பணத்தையும் திருடியது சௌமியா செட்டி தான் என்று தெரியவந்துள்ளது. திருடிய கையோடு நடிகை சௌமியா செட்டி கோவாவிற்கு டூர் சென்று திருட்டுப் பணத்தில் மிகவும் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை அடுத்து கோவாவிற்கே சென்ற விசாகப்பட்டினம் போலீசார் தங்கம் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக சவுமியா ஷெட்டியை கைது செய்து விசாரணை செய்தனர். இதனால் லோ பட்ஜெட் படங்களில் நடித்து வந்த சௌமியா தற்பொழுது பட வாய்ப்பு கிடைக்காததால் திருட்டில் இறங்கிவிட்டார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது