90களில் இருந்து ஆரம்ப காலத்தில் 2கே கிட்ஸ் வரை சினிமா பார்க்கும் பலருக்கும் நடிகை ரோஜா என்றாலே மிகவும் பிடித்திருக்கும். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் 1991 முதல் 2002 வரை ஒரு பிரபல நடிகையாக பல திரைப்படங்களில் நடித்து வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். 2022ம் ஆண்டில் ஒரு அரசியல்வாதியாக முழுமையாக மாறப்போவதாகவும் அதனால் திரைப்படத்துறையில் இருந்து விலகி முழுவதுமாக அரசியலை கவனிக்கப் போவதாகவும் ரோஜா அறிவித்திருந்தார். மேலும் அதற்குப் பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கப் போவதில்லை என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது திரையுலகத்திலிருந்து விலகி முழுமையாக அரசியலை கவனித்துக் கொண்டு வந்துள்ளார். மேலும் தற்போது ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராகவும் இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது நாடெங்கிலும் பல இடங்களில் தேர்தல் நடந்து கொண்டு உள்ளது. இந்த நிலையில் வருகின்ற மே 13, 2024 அன்று ஆந்திர பிரதேசத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் ஆந்திர பிரதேசத்தின் பல பகுதிகளில் பிரச்சாரங்களும் ஓட்டு கேட்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்து கொண்டு வந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு கிராமத்தில் நடிகை ரோஜாவை முற்றிலும் புறக்கணித்து பிரச்சாரம் செய்ய விடாமல் பொதுமக்கள் அனைவரும் எதிர்த்துள்ளனர். அது ஏன்?? எதற்கு இப்படி செய்தார்கள் என்பதை பற்றி விரிவாக காணலாம்!!!
ஆந்திர பிரதேசத்தில் வருகின்ற மே 13ஆம் தேதி பார்லிமென்ட் தேர்தலும், சட்டசபை தேர்தலும் ஒரே நேரத்தில் நடக்க உள்ளது. இதில் 175 சட்டசபை தொகுதிகளும், 25 லோக்சபா தொகுதிகளும் இணைந்து ஒரே கட்ட தேர்தலாக நடக்க உள்ளது. இந்த நிலையில் சித்தூர் மாவட்டம் நகரி எம்எல்ஏ தொகுதியில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சர் ரோஜா போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து வேமாபுரம் கிராமத்தில் திறந்த ஜீப்பில் வாக்கு சேகரிப்பதற்காக சென்றார். அப்போது மலர்கள் தூவி ரோஜாவை அந்த ஊர் மக்கள் வரவேற்றனர். அப்போது திடீரென்று எங்கிருந்தோ ஒரு கூட்டமாக மக்கள் திரண்டு வந்தனர். ரோஜாவின் வாகனம் ஊருக்குள் வரக்கூடாது என்றும் இந்த ஊருக்குள் பிரச்சாரம் நடத்தக்கூடாது என்றும் தங்களின் எதிர்ப்பை காட்டினர். ஏன் இப்படி எதிர்ப்பை காட்டுகிறார்கள் என்று புரியாமல் பலரும் நின்று கொண்டிருந்தனர்.
தொடர்ச்சியாக அவர்கள் கூறுகையில் 10 வருடமாக தங்களின் ஊருக்கு ஒரு எம்எல்ஏவாக எந்த ஒரு பிரச்சனையும் தீர்த்து வைக்கவில்லை என்றும், தற்போது ஓட்டு கேட்டு வரும் உரிமை மட்டும் எப்படி உள்ளது என்றும், தங்களின் ஓட்டுகளை போட முடியாது என்றும் ஆவேசமாக கூட்டத்தில் உள்ள மக்கள் கூறினார்கள். மேலும் இப்படி ஓட்டு கேட்டு வந்தாலும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்றும் நேரடியாக மக்கள் ரோஜாவினை எதிர்த்து வந்தனர். மேலும் மக்கள் தங்களின் வீட்டிற்குள் சென்று கதவினை பூட்டி கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஓட்டு சேகரிப்பதற்காக சென்ற ரோஜாவிற்கு பெரும் ஏமாற்றமாக ஆகிவிட்டது. இதனால் ரோஜாவின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் பெரும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என்று போலீசார் ரோஜாவிடம் கூறியுள்ளனர். எனவே ரோஜா அந்த இடத்தில் இருந்து உடனே எஸ்கேப் ஆகி அந்த ஊரில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறியுள்ளார்!! தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.