தமிழக டிஜிபி சைலேந்திர பாபு திரைப்பட பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, தற்போது கள்ளக்குறிச்சி சின்ன சேலம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரத்தை முன்னிட்டு பல்வேறு விமர்சனங்கள் காவல்துறை மீது எழுந்துள்ள சூழலில் இந்த வீடியோவை டிஜிபியை விமர்சனம் செய்பவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழக டிஜிபியாக பொறுப்பேற்பதற்கு முன்னரே சைலேந்திரபாபு இளைஞர்கள் மத்தியில் பிரபலம், மேலும் அவரது பல்வேறு பேச்சுக்கள் செயல்பாடுகள், மக்கள் மனதில் குறிப்பாக வேலை தேடும் இளைஞர்கள் மனதிலும், அரசு தேர்வுகளுக்கு தயாராவோர் மத்தியிலும் உத்வேகம் அளித்தது. இந்த சூழலில் சமீப நாட்களாக டிஜிபி சைலேந்திரபாபு மீது பல்வேறு விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
தொடர்ச்சியாக தமிழகத்தில் லாவண்யா விவகாரம் தொடங்கி, தற்போதைய கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கிலும் பல்வேறு விமர்சனங்களை தமிழக கவால் துறை பெற்று வருகிறது, இன்றைய வழக்கு விசாரணையின் போது தமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டிலும் இல்லை என கடுமையாக விமர்சனம் செய்து இருந்தது நீதிமன்றம்.
இந்த சூழலில்தான் சிலர் முன்பு சைலேந்திரபாபு நடிகர் அஜித்குமார் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை பகிர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர், சைக்கிள் ஓட்டுவது, பேசுவது, டான்ஸ் ஆடுவது என அனைத்தையும் செய்கிறார் ஆனால் சட்டம் ஒழுங்கை மட்டும் காப்பாற்ற தவறுகிறார் எனவும் சைலேந்திரபாபு மீது விமர்சனம் வைக்கின்றனர்.
அதே நேரத்தில் சைலேந்திரபாபுவிற்கு ஆதரவாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.