Tamilnadu

இந்து மத எதிர்ப்பில் தொடங்கி இந்திய எதிர்ப்பில் வந்து நிற்கும் திமுக தகுதி நீக்கம் செய்யப்படுவாரா ஈஸ்வரன்

Kongu eeswaran
Kongu eeswaran

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள திமுக ஆட்சியில் பிரிவினைவாதம் அதிகரித்து வருவதும், அதனை தமிழக சட்டசபையில் பேச தொடங்குவதும் தமிழகம் மற்றொரு காஷ்மீராக மாறும் சூழல் உண்டாகி வருவது கண் கூடாக தெரிய தொடங்கியுள்ளது.


திமுக அமைச்சர்கள் தொடங்கி முதல்வர் வரை மத்திய அரசாங்கத்தை ஒன்றிய அரசு என அழைக்க தொடங்கினர், இதற்கு கடும் எதிர்ப்பு கிளப்பியது புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒன்றியம் என்ற வார்த்தை இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க முயலும் பிரிவினை வாதம் என கடுமையான கண்டனத்தை பதிவு செய்ததுடன், ஆளுநர் உரையில் ஒன்றியம் என்ற வார்த்தையை நீக்க கோரி ஆளுநருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

அதிமுகவும் மத்திய அரசை மத்திய அரசு என்றே அழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது, தமிழக பாஜக ஒன்றிய அரசு என அழைப்பது அரசியல் சாசனத்தை இயற்றிய அம்பேத்கரை இழிவு படுத்தும் செயல் எனவும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது, இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலின் ஒன்றியம் என்ற வார்த்தை கூட்டாட்சியின் தத்துவம் என கூறி பிரிவினைவாத கருத்து இல்லை என பேசினார்.

இது ஒருபுறம் இருக்க வழக்கமாக திமுக ஆட்சி அமைந்தால் இந்து களுக்கு எதிரான ஆட்சியாக கருதுவதும் அதற்கு சாட்சியாக திமுக இந்துக்கள் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்துக்கள் கூறாமல், இந்துக்கள் பண்டிகையை விமர்சனம் செய்வதும் வழக்கமாக கொண்டிருக்கும் ஆனால் இந்த முறை இந்தியாவின் ஒருமைபாட்டை கேள்வி எழுப்பும் வகையில் செயல்பாடு அமைந்துள்ளது.

ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை ஆளுநர் உரையில் பயன்படுத்தாதது, தமிழகம் தலை நிமிர்ந்து விட்டாதற்கான அடையாளமாக பார்ப்பதாக திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற ஈஸ்வரன் தெரிவித்துள்ளது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, கஜெய் ஹிந்த் என்பதன் பொருள் இந்தியா வாழ்க /இந்தியா வெல்க என்பதாகவும் இந்தியாவிற்கு ஹிந்துஸ்தான் என்ற பெயர் இருப்பதால் அவ்வாறு கூறப்படுகிறது.

ஆனால் ஜெய்ஹிந்த் வார்த்தையை பயன்படுத்த கூடாது என சட்டமன்ற உறுப்பினர் தெரிவிப்பதும் அதற்கு இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் முதல்வராக பதவி ஏற்றுள்ள ஸ்டாலின் அமைதியாக வேடிக்கை பார்ப்பதையும் பார்த்தால் திமுக அரசாங்கம் இந்து எதிர்ப்பில் தொடங்கி தற்போது இந்திய எதிர்ப்பில் வந்து நிற்பதாக சந்தேகம் எழுகிறது.

தமிழகம் பாதுகாப்பு முக்கியத்துவம் மிகுந்த மாநிலம் என்பதாலும் அண்டை நாடான இலங்கை சீனாவுடன் நெருக்கம் காட்டும் நிலையில், தமிழகத்தில் பிரிவினைவாதங்கள் எழுவது நாட்டின் பாதுகாப்பிற்கும், குறிப்பாக தமிழர்களின் பாதுகாப்பிற்கும் விடப்பட்ட சவால் என பாதுகாப்பு விவகாரங்களை கவனித்து வரும் ஆலோசகர்கள் அதிர்ச்சி தகவலை கொடுக்கின்றனர்.

உடனடியாக தமிழகத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் தமிழக ஆளுநர் சட்டமன்றத்தில் நடைபெறும் பிரிவினைவாத பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் மீண்டும் தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகளுக்கு இடம் கொடுக்கும் சூழல் உண்டாகும் என இந்திய நலனின் அக்கறை கொண்ட தமிழர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அரசியல் சாசனத்தின் படி பொறுப்பேற்ற சட்டமன்ற உறுப்பினர் பிரிவினைவாதத்தை விதைக்கும் வகையில் பேசியிருப்பது மூலம் அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்ற குரல்கள் எழ தொடங்கியுள்ள நிலையில் ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா? ஆளுநர் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு தமிழக பாஜக தலைவர்கள் எடுத்து செல்வார்களா எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.