Cinema

மதுவந்திக்கு திருட்டு வழி அட்வைஸ்! தூதுவளை சூப் குடிக்கும் ஷர்மிளாவுக்கு மூளை வலிமையாம்! கடனை இப்படி தான் தள்ளுபடி செய்தாராம்!

maduvandi
maduvandi

என்ன மேடம் நீங்க கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக ...என மதுவந்தியை வந்து கிண்டல் செய்யும் விதமாக ட்விட் செய்துள்ளார் நடிகை ஷர்மிளா.


கடந்த 2016 ஆம் ஆண்டு இந்துஜா லைலாண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கி ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் வீடு ஒன்றை வாங்கினார் மதுவந்தி. அவர் வாங்கிய கடன் தொகையில் ஒரு கோடியே 21 லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்தாததால் ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி வீட்டை சீல் வைத்தனர் நிதி நிறுவன அதிகாரிகள்.

அப்போது அங்கிருந்த ஒருவர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர அது பயங்கரமாக மக்களை சென்றடைந்தது. மேலும் எதிர்க்கட்சியினருக்கு கிடைத்த அல்வா போன்று மதுவந்தி கெஞ்சி கேட்கும் வீடியோவை பார்த்து பலரும் குளிர்காய்ந்தனர் .அதேவேளையில் பல தலைவர்கள், கருத்து வேறுபாடு முரண்பட்டு இருந்தாலும் மதுவந்திக்கு, இது சொந்த பிரச்சனை. இதை பெரிது படுத்துவதம், கேலி கிண்டல் செய்வதும் தவறான ஒன்று என கருத்து தெரிவித்திருந்தனர்.

இருந்தபோதிலும் மதுவந்தி எது பேசினாலும் முன்னதாக பேசுபொருளாக மாற்றி சமூக வலைத்தளத்தில் வைரல் செய்யப்படும். ஆனால் இந்த விஷயத்தில் சற்றும் குறைவில்லாமல் மதுவின் சொந்த பிரச்சனை என்று கூட சிந்திக்காமல், பலரும் அதில் குளிர்காய தொடங்கிவிட்டனர்.

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து கிண்டல் செய்யும் விதமாக நடிகை ஷர்மிளா ஒரு டுவிட் செய்துள்ளார். அதில், "என்ன மேடம் நீங்க கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக நம்ம ஜி கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா கமுக்கமா கடனைத் தள்ளுபடி பண்ணி இருப்பாரு. ஆனாலும் உங்களுக்கு மூளை வலிமை இல்ல மேடம். தினமும் இரண்டு வேளை தூதுவளை சூப் குடிங்க ப்ளீஸ்.... என பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்தப் பதிவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நெட்டிசன்கள் நீங்கள் 2 வேளை சூப் குடித்து விட்டு உங்கள் தலைவர் மூலமாக எத்தனை கோடி கடன்களை தள்ளுபடி செய்து இருப்பீர்களோ என்பது இப்போது புரிகிறது என புரிகிறது. என்ன செய்வது? உங்கள மாதிரி அம்துவந்திக்கு திருட்டுத்தனம் செய்யத் தெரியவில்லை என சிலர் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும் ஏற்கனவே பிரதமர் மோடியைப் பற்றி அவன் இவன் என மரியாதை இல்லாமல் பதிவிடும் ஷர்மிளா மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில் மதுவந்தி விஷயத்திலும் பிரதமரை வம்புக்கு இழுத்து இருக்கும் ஷர்மிளா ஒரு விளம்பர பிரியை என்றும் குறிப்பிடுகின்றனர். இப்படியே தொடர்ந்தால் சர்மிளா மீது வழக்குகள் பாய்ந்து கைதாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.