Tamilnadu

குத்துனது திமுகவா இருந்தா கட்சியைவிட்டே தூக்கணும் பரிதாப நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி பெண்!

Communist party women
Communist party women

பணம் பட்டுவாடா செய்வதாக புகார் கூறிய பெண் மற்றும் அவரது கணவரை கட்சியில் இருந்தே நீக்கி  முடிவு எடுத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர் குறிப்பாக 25 கோடி கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் இருந்து நன்கொடையாக பெற்ற நிலையில் கட்சியை விற்று விட்டார்களா என்ற கேள்வியை கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் எழுப்பியுள்ளனர்.


தி.மு.க., வேட்பாளர் பணம், குக்கர் கொடுப்பதாக புகார் : இந்திய கம்யூ., கட்சியில் இருந்து இருவர் நீக்கம்

கோவை மாநகராட்சியில் போட்டியிடும் தி.மு.க., பெண் வேட்பாளர் மீது, தேர்தல் அதிகாரியிடம் புகார் கூறிய, இந்திய கம்யூ.,வை சேர்ந்த இருவர், கட்சியில் இருந்து நேற்று நீக்கப்பட்டனர்.

கோவை மாநகராட்சி, 97வது வார்டில், தி.மு.க., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி மகளான, 22 வயது நிவேதா போட்டியிடுகிறார். 38வது வார்டை சேர்ந்த இவர், வார்டு மாறி போட்டியிடுவதால், கட்சியினருக்குள் இணக்கமான சூழல் இல்லை. இவரை எதிர்த்து, சுயேச்சையாக, கட்சியின் பொறுப்புக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார்.

இதேபோல், கூட்டணி கட்சியான இந்திய கம்யூ.,வை சேர்ந்த நிரஞ்சனா தேவி, சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவர், மாவட்ட தேர்தல் அலுவலரிடம், தி.மு.க., வேட்பாளருக்கு எதிராக மனு கொடுத்தார். அம்மனுவில், 'கோவை மாநகராட்சி, 97வது வார்டில் சுயே., வேட்பாளராக போட்டியிடுகிறேன். இந்த வார்டில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர் நிவேதா, கஸ்துாரி கார்டன் பகுதியில், 591 வீடுகளுக்கு இட்லி குக்கர் வினியோகித்திருக்கிறார். சுயே., வேட்பாளர்களிடம் பேரம் பேசியிருக்கின்றனர். வேட்பாளர்களை விலை கொடுத்து வாங்குவது குற்ற நடவடிக்கை. இதுவரை, 2 கோடி ரூபாய்க்கும் மேலாக செலவு செய்திருக்கின்றனர்.

💐வாக்காளர்களுக்கு தலா, 1,000 ரூபாய் கொடுத்து ஓட்டுகளை வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நிவேதாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்; அவர் மீது குற்ற நடவடிக்கை பதிய வேண்டும்' என, தெரிவித்திருந்தார், இச்சூழலில், நிரஞ்சனா தேவி, அவரது கணவர் விஜயகுமார், இ.கம்யூ., அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டிருக்கின்றனர்.

இதுதொடர்பாக, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாநகராட்சியில் தி.மு.க., கூட்டணியில், இ.கம்யூ., 4 வார்டுகளில் போட்டியிடுகிறது. கட்சி கட்டுப்பாட்டை மீறி, 97வது வார்டில், குனியமுத்துார் கிளை உறுப்பினர் நிரஞ்சனா தேவி, சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு துணையாக, கணவர் விஜயகுமார் செயல்படுகிறார். இவ்விருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகின்றனர். இனி, கட்சிக்கும் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை' என, தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் சொந்த கட்சி நலனை விட முதலாளியான திமுக நலன் மீதுதான் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அக்கறை இருப்பதாக புலம்பி வருகின்றனர் சீட் கிடைக்காத பலர்.

More watch videos