தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது, பாஜக சார்பில் நட்சத்திர வேட்பாளர்களாக முருகன்,H ராஜா,வானதி, அண்ணாமலை, MR காந்தி, நயினார் நாகேந்திரன், குஷ்பூ, வினோஜ் பி செல்வம் இன்னும் பலர் களத்தில் இறங்கினர்.
பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில் எந்தெந்த இடங்களை அக்கட்சி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது, இதற்கு முக்கிய காரணம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தமிழகத்தில் பாஜகவை கால் பாதிக்க விடமாட்டோம் என தெரிவித்தது, மற்றும் பாஜக மீதான ஊடகங்களின் விமர்சனங்கள் ஆகியவேகாரணம்.
இந்த நிலையில் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது இதில் பாஜக தாராபுரம், கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி என கூறப்படுகிறது, மேலும் அரவக்குறிச்சி, இராமநாதபுரம், திருநெல்வேலி, மொடக்குறிச்சி, துறைமுகம், நாகர்கோவில் ஆகிய இடங்களில் என்ன முடிவு வேண்டுமானலும் வெளியாகலாம் எனவும் கருத்து கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
பாஜகவின் வரலாறே இரண்டு இடங்களின் வெற்றியில் இருந்துதான் தொடங்கி இருக்கிறது, குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் ஆரம்பகட்டத்தில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தற்போது தனி பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது, இந்தியாவின் பல மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் பாஜக இருக்கிறது.
எனவே தமிழகத்தில் இரண்டு இடங்களில் பாஜக வெற்றி பெற்றால் நிச்சயம் அடுத்த சட்டமன்ற பொது தேர்தலுக்கு முன்னர் பாஜக மிக பெரிய கட்சியாக உருவெடுக்கும் எனவும், பாஜக ஆட்சியை பிடித்தாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை எனவும் கூறப்படுகிறது, தமிழகத்தில் இந்த முறை அழுத்தமாக தடம் பதிக்க பாஜக தயாராகிவிட்டதாக வெளிவறும் செய்திகள் பாஜக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன.