Politics

போட்டோ எடுத்து பிரசன்னா கொண்டாடிய மறு நாளே நீக்க சொன்ன ஸ்டாலின்! நேரில் வரவைத்து கண்டிப்பு!!

போட்டோ எடுத்து பிரசன்னா கொண்டாடிய மறு நாளே நீக்க சொன்ன ஸ்டாலின்! நேரில் வரவைத்து கண்டிப்பு!!
போட்டோ எடுத்து பிரசன்னா கொண்டாடிய மறு நாளே நீக்க சொன்ன ஸ்டாலின்! நேரில் வரவைத்து கண்டிப்பு!!

தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ள திமுக மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து பெற முயற்சித்து வருகிறது, தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார், அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கையில் ஈடுபட்டத்துடன் அம்மா உணவகத்தின் பெயரையும் மாற்ற விரும்பவில்லை என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


தொடர்ந்து புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் ஸ்டாலினை புகழ்வதாக நினைத்து திமுகவிற்கு அதன் முக்கிய கட்சிகளே ஆப்பு வைத்து விடுகின்றனர் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. திமுகவின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான தமிழன் பிரசன்னா திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்கும் நாள் அன்று தலைமை செயலகம் வந்திருந்தார்.

அப்போது அங்கு இருந்த. ஸ்டாலின், கருணாநிதி ஆகியோர் புகைப்படங்களை போட்டோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றிணை பகிர்ந்து இருந்தார், அதில்..

இந்த படம் என்‌ வாழ்வில் மிக முக்கியமானது...

இந்த படம் நான் எடுக்கும் போது அங்கிருந்த எல்லோரும் கேட்டனர்

சார்‌ நீங்க தலைவர் கிட்டயே இருக்கிறவர் ,ஏன் இந்த பேனர்ல போய் படம் எடுக்கிறீங்கனு..

அவர்களுக்கு நான் சொன்ன பதில்

இந்த இடத்தில் ‌தமிழகத்தை தரம் தாழ்த்தி நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்தும் அகற்றப்படாத ஜெயாவின் படம் இருந்தது., அந்த இடத்தில் இன்று தமிழகத்தின் தன்மானத்தை நிமிர்த்தி தலைவரின் படம் இன்று கோட்டையை அலங்கரிக்கின்றது , மகிழ்ச்சியில் தவழ்கின்றேன் என குறிப்பிட்டார்.

திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்தினை அகற்ற கோரி, தலைமை செயலாளரிடம் திமுக மனு அளித்த நிலையில் அதே இடத்தில் திமுக ஆட்சி அமைந்து ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி புகைப்படம் இருப்பது நியாமா என தலைமை செயலகத்தில் இருக்க கூடிய முக்கிய நபர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரம் முதல்வர் ஸ்டாலின் காதிற்கு செல்ல உடனடியாக பேனர்களை அகற்ற உத்தரவிட்டுள்ளார் அத்துடன் அங்கு பேனர் வைத்த நபர்களையும், அதனை புகைப்படம் எடுத்து பரப்பிய பிரசன்னா போன்றோரை ஸ்டாலின் கண்டித்தாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா இல்லாத போதும் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக மெகா கூட்டணி அமைத்தும் 125 இடங்களில் மட்டுமே தனித்து வெற்றி பெற்றது, இதனை ஸ்டாலின் ரசிக்கவில்லை, குறைந்தது, திமுக 145 இடங்களில் வெற்றி பெரும் என காத்திருந்த அவருக்கு 125 இடங்கள் மட்டுமே கிடைத்தது, ஒரு வகையில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது, எனவே இப்போது இருந்தே ஆட்சியையும் கட்சியையும் காட்டுக்கோப்பாக நடத்தினால் மட்டுமே மீண்டும் ஆட்சிக்கு வரலாம் 2024 ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம் என கணக்கிட்டு பணியை செய்ய தொடங்கியுள்ளராம் ஸ்டாலின்