Politics

அண்ணாமலையை தோற்கடித்தது பள்ளப்பட்டியா பழனிச்சாமியா? டெல்லியில் கொடுக்கப்பட்ட அதிரடி ரிப்போர்ட்!!

அண்ணாமலையை தோற்கடித்தது பள்ளப்பட்டியா பழனிச்சாமியா? டெல்லியில் கொடுக்கப்பட்ட அதிரடி ரிப்போர்ட்!!
அண்ணாமலையை தோற்கடித்தது பள்ளப்பட்டியா பழனிச்சாமியா? டெல்லியில் கொடுக்கப்பட்ட அதிரடி ரிப்போர்ட்!!

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக அரசு அமைந்துள்ளது, தமிழகத்தில் பாஜகவிற்கு என்று புதிதாக நான்கு MLA களை தமிழக மக்கள் கொடுத்துள்ள நிலையில், பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவினர்.


இதில் முக்கியமானவர் பாஜகவின் இளம் முகம் அண்ணாமலை, ஏராளமான இளைஞர்கள் ஆதரவுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை வெற்றி பெறுவார் என்றே டெல்லி தலைமை நம்பியது, அந்த நம்பிக்கை இருந்த காரணத்தினால் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில் அண்ணாமலை வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தலைமைக்கு 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வியை தழுவியது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது, மேற்கு வங்க தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற வன்முறை சம்பவங்களை முடிவிற்கு கொண்டுவரவும், அசாம் மாநிலத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணியில் பாஜக தலைமை ஈடுபட்ட காரணத்தால் தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து கவனத்தில் கொள்ளவில்லை.

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி மீது டெல்லியில் அடுக்கடுக்காக குற்றசாட்டை கொடுத்துள்ளது உளவு அமைப்பு, தமிழக பாஜகவை சேர்ந்த தலைவர்கள் சிலரே பாஜகவினர் என்பதை மறந்து, எடப்பாடி ஆதரவாளர் என்ற முடிவை நோக்கி சென்றுவிட்டதாகவும் இதற்கு முக்கிய காரணம் கொங்கு மண்டல ஆதரவு மற்றும் பணம் என அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலம் உட்பட பல பகுதிகளில் அதிமுக கூட்டணி படு தோல்வி அடைந்தது, ஆனால் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 100% வெற்றியை கொங்கு மண்டலத்தில் பதிவு செய்துள்ளது, இதற்கு எடப்பாடி பழனிசாமி வேலுமணி ஆகியோரின் சதி திட்டமே காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றால் அது பாஜகவிற்கே பலன் அளிக்கும் எனவும் மேலும் பாஜக கூட்டணிவலுவாகும் என்ற காரணத்தால் திட்டமிட்டு நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றவில்லை எனவும் அதே நேரத்தில், இந்த முறை பாஜக, பாமக கூட்டணி கட்சிகள், தென் மண்டலங்களை தவிர்த்து அதிமுக எடப்பாடி அணி தீவிரமாக பணியாற்றியதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் அண்ணாமலை வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றால் பாஜக மிக பெரிய வளர்ச்சி அடைவதுடன், அண்ணாமலை கொங்கு மண்டலத்தின் முகமாக மாறுவார் என்பதால் வெற்றி வாய்ப்பே இல்லாத தொகுதியை அதிமுக தலைமை ஒதுக்கியுள்ளது.. கிணத்து கடவு சட்டமன்ற தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டு இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதை காட்டிலும் எடப்பாடி பழனிசாமி முக ஸ்டாலின் இடையே ஒப்பந்தம் ஒன்று உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து வலுவான வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் வாபஸ் பெறப்பட்டு, சாதாரணமான வேட்பாளர் அறிவிக்கப்பட காரணம் உதயநிதிக்கு எதிராக டம்மி வேட்பாளரை நிறுத்த மேற்கொண்ட ஒப்பந்தம் தான் காரணம் எனவும் பாமகவிற்கு வாக்கு வங்கி உள்ள இடங்களை தவிர்த்து சேப்பாக்கத்தை ஒதுக்க காரணமே இருவரும் ஒருவருக்கு ஒருவர் செய்து கொண்ட ஒப்பந்தம் எனவும் இந்த ஒப்பந்தத்தை முன்னின்று நடத்தியவர் துரை முருகன் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

துரை முருகன் 700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக வெளியான அறிவிப்பும் அழுத்தம் காரணமா கொடுக்கப்பட்டது எனவும் உண்மையில் துரை முருகன் தோல்வியை தழுவினார் எனவும் குறிப்பிட்டுள்ளனர், இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் டெல்லி. தலைமை இருக்கிறதாம் மேலும் சொந்த கட்சி தோல்வியை தழுவ காரணமாக இருந்த நிர்வாகிகள் பட்டியலையும் தயார் செய்யவும் டெல்லி தலைமை தமிழக பாஜகவை சேர்ந்த மூன்று முக்கிய நபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

விரைவில் பாஜக அதிமுக உறவில் மாற்றம் உண்டாவதுடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க டெல்லி பாஜக தலைமை தயாராகிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள், அண்ணாமலை தோல்வி அடைய அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள பள்ளப்பட்டி மற்றும் காரணமல்ல வெற்றி வாய்ப்பற்ற தொகுதியை ஒதுக்கி அதில் உள்ளடி வேலையில் ஈடுபட்ட பழனிசாமியும் ஒரு காரணம் என்பது தெளிவாகியுள்ளது.