Cinema

தமிழகத்தில் குவிந்த அமலாக்கத்துறை... அமீர் வீட்டில் அதிரடி சோதனை..!

Ameer, Jaffer
Ameer, Jaffer

ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். அதே போல் இயக்குநர் அமீர் வீட்டிலும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறார்கள்.


போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான சினிமா தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்யிடம் தீவிர விசாரணை நடந்தது. இந்த விசாரணைக்கு பிறகு தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர், சையது இப்ராஹிம், அப்துல் பாசித் புகாரி ஆகிய 3 பேருக்கு டெல்லி என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி இவர்களிடம் இயக்குநர் அமீர் தனது வழக்கறிஞருடன்  ஏப்ரல் 2 ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் 10 மணி நேரம் மேலாக விசாரணை செய்யப்பட்டது. நீண்ட நேரம் நடைபெற்ற நிலையில், மீண்டும் விசாரணைக்கு வர வேண்டியிருக்கும் என கூறி இருந்தனர். இந்தப்போதை பொருள் விவகாரம் கடப்பில் போட பட்டதாக கூறிய நிலையில் சைலண்டாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

                                                                                

இந்தசூழ்நிலையில், சென்னை தி.நகர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் சோதனையை தொடர்ந்து, சேத்துப்பட்டு முக்தார் கார்டனில் சோதனை நடைபெற்றது. இந்த முக்தார் கார்டன் இல்லத்தை 2 வருடங்களுக்கு முன் அமீர் வாங்கியதாக தகவல் வெளியானது. அமீரின் வீடு பூட்டியிருந்ததால், 10 நிமிடங்கள் காத்திருந்து பிறகு சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 7 மணி முதல் சென்னை முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். 

                                                                              

இந்த சோதனையில் அமீரின் அலுவலகத்தில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகளின் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர். ஜாபர் சாதிக் உடன் அமீருக்கு தொடர்பு இருப்பதாக மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆஜரான அமீரிடம் சுமமார் 11 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். அமீரும், ஜாபர் சாதிக்கும் இணைந்து ஒரு ஹோட்டல் நடந்து வந்ததாக கூறப்பட்டது. அமீர் இயக்கி நடித்த இறைவன் மிக பெரியவன் படத்தில் ஜாபர் சாதிக் தயாரிப்பாளராக இருந்துள்ளார்.

                                                                                    

சட்டவிரோத பண பரிமாற்றத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமீரின் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு தான் சேத்துப்பட்டில் உள்ள அமீர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இது அவரது உறவினர் வீடு என்றும் அங்கு அமீர் அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சாதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாகவும். வெளிநாட்டு முதலீடுகள், பணப் பரிவர்த்தனை தொடர்பாகவும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையானது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                                                                               

மேலும், மீண்டும் அமீர் ஆஜராகி விளக்கம் கொடுக்க நேரிடும் என்றும் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கும் சம்மன் அனுப்பப்படலாம் என்றும் திமுகவை சேர்ந்தவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பலாம் அல்லது அமலாக்கத்துறை நேரடியாக சோதனைக்கு இறங்கலாம் என்று கூறப்படுகிறது. தேர்தல் ஒரு பக்கம் பரபரப்பாக செல்லும் நிலையில் இன்று மீண்டும் ஜாபர் சாதிக் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.