இளையராஜாவிற்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவியை பாஜக அரசு கொடுத்துள்ளதாக பல்வேறு நபர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர், மேலும் ஒரு படி மேலே சென்று இளையராஜாவை தலித் என்ற அடையாளம் காரணமாக பாஜக கையில் எடுத்து இருப்பதாக பேசுகின்றனர், இந்த சூழலில்தான் பத்திரிகையாளர் ஏகலைவன் கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, பாஜக தலித் மக்களின் வாக்குகளை குறிவைத்து இளையராஜாவுக்கு MP பதவி கொடுத்துள்ளது என உ.பி.களும், விருதுக்கும், வாரியத்திற்கும், 'வாக்கப்பட்ட' கோஷ்டிகளும் புலம்பித் தள்ளிக் கொண்டு உள்ளது.
இவர்கள் கூட்டணி வைத்துக் கொண்டு மந்திரி பதவி அனுபவித்தால் முற்போக்கு -சமூகநீதி அரசியில். மற்றவர்களுக்கு நடந்தால் தலித் அரசியல். ஓட்டுக்கான அரசியல். காலையில் விரிவா ஒரு பஞ்சாயத்து வைக்கனும்.
இப்போது கீழே இருப்பது 'திராவிட'சாதிக்கான அரசியலா இல்லையா? (திமுக ITவிங்கின் மாநில துணை அமைப்பாளர் தான் இந்த சுரேஷ் செல்வராஜ்.!)அல்லது இதுவும் முற் போக்கு அரசியலா? 'வாக்கப்பட்ட' முற்போக்குகள் மேடைக்கு வந்தால் சிறப்பு.
குறிப்பு: தமிழர்களுக்கு என்றால் தலித் + இன்னபிற சாதி அரசியல் பேசுவது.திராவிடர்களுக்கு என்றால் 24 தெலுங்கு மனை செட்டிகள் என்றால் மெளனமாகி விடுவது _ _ _ _ _ மாடல் என்பதா எனவும் அவர் காரசாரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். இளையராஜா மீதான தொடர் விமர்சனத்திற்கு தற்போது பதிலடியை பல்வேறு நபர்களும் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.