இயக்குனர் பேரரசு தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து தெரிவித்த கருத்துக்களை அக்கட்சியின் தொண்டர்கள் வரவேற்று அதிக. அளவில் பகிர்ந்து வரவேற்பு அளித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் விஜய் அஜித் என முன்னணி நடிகர்களை இயக்கி பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் பேரரசு இவருக்கு அவர் சார்ந்த இந்து சமூகம் மீதும் இந்தியா மீதும் அளவுகடந்த நம்பிக்கை இருக்கிறது, ஏதாவது சர்ச்சைகள் உருவாகும் போதெல்லாம் தனது கருத்துக்களை ஆணி தரமாக தெரிவித்து வந்து இருக்கிறார்.
அந்த வகையில் திருவாரூரில் அண்ணாமலை தலைமையில் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயரை வைக்க கூடாது என பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர், தமிழக அரசியலில் சமீபத்தில் இப்படி ஒரு கூட்டம் எந்த கட்சி தலைவருக்கும் வந்தது இல்லை என பலரும் பேசிவந்தனர்.
இந்த புகைப்படத்தை பகிர்ந்த பேரரசு அவரது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் ஒரு தேசியக் கட்சியில் இருந்து கர்மவீரர் காமராஜருக்கு பிறகு திரைப்பட வெளிச்சம் இல்லாத, கவர்ச்சி பேச்சு இல்லாத, மக்கள் செல்வாக்குடன் திரு. அண்ணாமலை அவர்கள் ஒரு மக்கள் தலைவனாக உருவாகிக் கொண்டிருக்கிறார் என குறிப்பிட்டு இருக்கிறார் பேரரசு.
மொத்தத்தில் தமிழகத்தில் புதிதாக ஒரு தலைவர் அதிலும் தேசிய கட்சியில் இருந்து உருவாகி இருக்கிறார் என்ற செய்தி தேசியவாதிகளுக்கு மகிழ்ச்சியையும், திராவிட சித்தாந்தம்
தமிழ்நாட்டில் ஒரு தேசியக் கட்சியில் இருந்து
— PERARASU ARASU (@ARASUPERARASU) May 15, 2022
கர்மவீரர் காமராஜருக்கு பிறகு திரைப்பட வெளிச்சம் இல்லாத, கவர்ச்சி பேச்சு இல்லாத,
மக்கள் செல்வாக்குடன் திரு. அண்ணாமலை அவர்கள் ஒரு மக்கள் தலைவனாக உருவாகிக் கொண்டிருக்கிறார். pic.twitter.com/XnPetuelt9