தமிழக காவல்துறை அதிரடியாக மாநிலம் முழுவதும் சந்தேகப்படும் ரவுடிகள் பட்டியலில் உள்ள நபர்களை கைது செய்து வருகிறது அத்துடன் பலரிடம் இருந்து ஆயுதங்களை கைப்பற்றியுள்ளது , இந்நிலையில் தமிழக காவல்துறை நடவடிக்கை பல தரப்பிலும் பாராட்டுகளை பெற்றுவரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது .
தமிழக காவல்துறை முழுக்க முழுக்க சாதிய ரீதியாக செயல்பட்டு வருவதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும் , தலித் சமூகத்தை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கையில் தமிழக காவல்துறை செயல்பட்டு வருவதாகவும் வன்னியரசு கருத்து தெரிவித்து வருகிறார் , அத்துடன் தனியார் யூடுப் சேனலுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் புதிதாக வந்த IPS அதிகாரிகளுக்கு எங்களை பற்றி தெரியவில்லை விடுதலை சிறுத்தைகள் வரலாரே அடங்கமறு ,அத்துமீறு ,திமிறி எழு ,திருப்பி அடி என்பதுதான் அதன்படி வந்தவர்கள் நாங்கள் என தெரிவித்தார் .
முழுக்க முழுக்க காவல்துறையினரை எச்சரிக்கும் விதமாக வன்னியரசின் பேட்டி அமைந்தது . இந்நிலையில் சேலம் மாவட்டம் மோரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பத்தை வைக்க சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழக காவல்துறை மறுப்பு தெரிவிக்க அதன் பிறகு கொடிகாம்பம் நடும் நிகழ்ச்சி பதற்றத்தில் முடிந்தது இதனை மனதில் வைத்தே விசிக நிர்வாகிகள் தமிழக கலைத்துறையை கடுமையாக விமர்சனம் செய்து வந்துள்ளனர் , எப்படியும் காவல்துறை இறங்கிவரும் என கணக்கு போட்டு விமர்சனம் செய்து வந்துள்ளனர் .
ஆனால் தமிழக காவல்துறை திருமாவளவன் சேலம் மற்றும் மதுரையில் மாவட்டத்தில் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டதாகவும் முழுமையாக சட்டம் ஒழுங்கை காப்பற்ற அனைத்து கட்டத்திற்கு செல்ல தயார் என்ற நிலையில் இருக்கிறதாம் ,தமிழக காவல்துறைக்கு விடுதலை சிறுத்தைகள் எச்சரிக்கை விடுக்க தமிழக காவல்துறையோ மாநிலம் முழுவதும் தொடர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு சிறப்பான தரமான சம்பவத்தை செய்து வருகிறது .
விடுதலை சிறுத்தைகள் முதல்வரிடம் பேச இருப்பதாக கூறி சேலம் , மதுரையில் நடத்த இருந்த போராட்டத்தை தள்ளிவைப்பதாக கூறி இருப்பது சேலம் மோரூரில் போராட்டத்தில் ஈடுபட இருந்த அக்கட்சியினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது . வன்னியரசு எச்சரிக்கை விடுத்த விடியோவை பார்க்க கிளிக் செய்யவும் .