Tamilnadu

"விமானத்தில்" நடிகையின் செயல் விசாரணையில் வெளிவந்தது "அடுத்து" சிக்கபோகும் மிக முக்கிய தமிழ் நடிகை!

Sukesh chandra and jacquline fernandas
Sukesh chandra and jacquline fernandas

சுகேஷ் சந்திர சேகர் இந்த பெயர் நியாபகம் இருக்கிறதா? இந்திய தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் தரப்பில் 50 கோடி வரை பேரம் பேசி இரண்டு கோடி பணத்தை இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பெறும்போது டெல்லி போலீசாரால் கையும் களவுமாக பிடித்து கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் பல கோடி ரூபாய் வெளிநாடுகளிலிருந்து சுகேஷ் சந்திர சேகரின் வங்கி கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததும் , பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள் அன்பளிப்பாக பெற்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.


இது தொடர்பாக  திகார் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சிறையில் இருந்தபடியே செல்போனில் பேசி தொழிலதிபர்கள் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஆகியோரிடம் 200 கோடி வரை லஞ்சம் பெற்று அன்பளிப்புகள் பெற்றதாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அன்பளிப்பு மூலம் பெறப்பட்ட சொகுசு கார்கள் சென்னை கானத்தூரில் உள்ள பண்ணை வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சென்னை கானத்தூர் சினேகா கார்டனில் உள்ள சுரேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது .

இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள மகாராஷ்டிரா , மத்திய பிரதேசம், அரியானா, இமாச்சல பிரதேசம், டெல்லி, தமிழ்நாடு என பல்வேறு மாநில பதிவு எண் கொண்ட சொகுசு கார்கள் மற்றும் சினிமா சூட்டிங்கில் பயன்படுத்தப்படும் நவீன கேரவன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதை அடுத்து சுகேஸ் சந்திர சேகர் தன்னிடம் இருந்த பணத்தை கொண்டு நடிகைகளுடன் நாள் கணக்கில் விமானத்திலும் ஹோட்டல் அறையிலும் லூட்டி அடித்த சம்பவம் வெளியாகியுள்ளது.சுகேஷ் சந்திரசேகர் பாலிவுட் நடிகைகளுக்கு எப்படி பணம் செலவழித்தார் என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. 

தகவல்களின்படி, ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு தனியார் ஜெட் விமானங்களை வாடகைக்கு எடுத்து கேரள விமான நிலையத்திலிருந்து ஹோட்டல்களுக்கு நடிகைக்காக ஹெலிகாப்டர் சுகேஷ் முன்பதிவு செய்துள்ளார். சுகேஷை சந்திப்பதற்காக ஜாக்குலின் சென்னைக்கு வந்ததாக ED வட்டாரங்கள் முன்பு கூறியிருந்தாலும், சுகேஷ் ஏற்பாடு செய்த சொகுசு தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் ஜாக்குலின் கேரளா மற்றும் கர்நாடகாவிற்கும் சென்றதாக ED விசாரணையில் தெரியவந்துள்ளது.

அறிக்கைகளின்படி, ஆகஸ்ட் மாதம் தான் சுகேஷை தனிப்பட்ட முறையில் நட்சத்திர ஹோட்டலில் சந்தித்ததாக ஜாக்குலின் ED யிடம் தெரிவித்திருந்தார்.  அவர் கூறினார், “நான் இரண்டு முறை கேரளாவிற்கு ஒரு தனியார் ஜெட் விமானத்தில் பயணம் செய்தேன், அவர் (சுகேஷ் சந்திரசேகர்) விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு ஹெலிகாப்டர் பயணத்தையும் ஏற்பாடு செய்தார்.  இரண்டுமே தனிப்பட்ட பயணங்கள்.  மேலும், “ஹோட்டல் செலவுகளை சுகேஷ் (சந்திரசேகர்) கவனித்துக்கொண்டார். 

நான் மும்பையிலிருந்து கேரளாவிற்கு ஒரு தனியார் ஜெட் விமானத்தில் பிக்-அப் மற்றும் டிராப்-ஆஃப் செய்தேன், மேலும் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் சவாரிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன என அவர் குறிப்பிட்டார் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன மேலும் விசாரணை வளையத்தில் தமிழகத்தை சேர்ந்த மிக முக்கிய நடிகை ஒருவர் சிக்கி இருப்பதாகவும் இவர் திரைப்படங்களில் புரட்சி பேசும் வசனம் கொண்ட ஒரு படத்தில் நடித்தவர் என்றும் விரைவில் அது குறித்த மிக முக்கிய தகவலும் வெளிவரும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.