பிரதமர் மோடியின் தமிழக பயணம் உறுதியாகியுள்ள நிலையில் பிரதமர் பயணம் குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன, இதில் சிறப்பு என்னவென்றால் தில்லு இருக்கும் மோடி மதுரை பக்கம் வாடி என வாய் வசனம் பேசி மக்களை ஏமாற்றிய ஜூலியை மதுரை மக்கள் எங்கே என தேடி வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அமைந்துள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி நேரடியாக தமிழகம் வந்து திறந்து வைக்கும் நிலையில் நிகழ்ச்சியை எங்கே வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு சார்பில் பிரதமருக்கு சில இடங்கள் தேர்வு செய்து அனுப்பப்பட்டதாகவும் அதில் அரியலூர், மதுரை, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், உள்ளிட்ட இடங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஆனால் பிரதமர் அலுவலகமோ விருதுநகரில் இந்த விழாவை வைத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசிடம் தெரிவித்திருப்பதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தை திருநாள் வழக்கமாக அதி விமர்சையாக கொண்டாப்படும் சூழலில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை காட்டிலும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மற்றும் தென் தமிழகத்தில் விழா கோலாகலமாக கொண்டாப்படுவது வழக்கம் ஜல்லிக்கட்டு தொடங்கி உறியடி என கிராமம் கிராமமாக உற்சாகம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்த சூழலில் தான் பிரதமர் அலுவலகம் மதுரை மற்றும் விருதுநகரை தேர்வு செய்துள்ளதாக TNNEWS24 க்கு தகவல் கிடைத்துள்ளது “ புதிதாக துவக்கப்பட இருக்கும் 11 மருத்துவக் கல்லூரிகளில் எதுவும் மதுரையில் அமையாத நிலையில் நிகழ்ச்சியை மதுரையில் நடத்துவது பொருத்தமானதாக இருக்காது என்று பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளது
அதேநேரம் கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், அரியலூர் என வட தமிழகத்தில் பிரதமரின் விழாவை வைப்பதை விட...புதிய மருத்துவக் கல்லூரி அமைய இருக்கும் விருதுநகரில் விழாவை வைக்கலாம் என்று பாஜக தலைமை பரிந்துரை செய்திருக்கிறது. இதில் தமிழர் திருநாளான தை திருநாள் குறித்தும் பிரதமர் செலவிட வசதியாக இருக்கும் என்ற பின்னணியும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் விருதுநகர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த மண். மேலும் தேவேந்திர குல வேளாளர்கள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் அடர்த்தியாக இருக்கும் மாவட்டம். பாஜகவிற்கு ஸ்பேஸ் இருக்கும் இடங்களில் ஒன்று இந்த காரணங்களை வைத்து விருதுநகரில் பிரதமர் கலந்துகொள்ளும் விழாவை நடத்த முடிவு எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் பிரதமர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன, இந்த சூழலில் காலம் ஒரு மனிதனை அடையாள படுத்திவிடும் என்பது முழுக்க முழுக்க உண்மையாக மாறியுள்ளது கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மாணவர்கள் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் அரசு காட்சி படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளையை நீங்கியதால் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தடை பட்டது இதனை மத்தியில் ஆட்சியில் வந்த பாஜக மாநிலத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக கொண்டு வந்த சிறப்பு சட்டத்தை அங்கீகரித்து மீண்டும் ஜல்லிக்கட்டு நடக்க சட்டத்தை கொண்டு வந்து நிலை நாட்டியது. ஆனால் இந்த போராட்டத்தை சில சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு பிரதமரை இழிவு செய்து வந்தனர்.
அதில் ஜூலியும் ஒருவர் தில்லு இருக்கும் மோடி மதுரை பக்கம் வாடி என அரைவேக்காட்டு தனமாக கோஷம் போட்ட ஜூலியை மக்கள் உண்மையான போராளியாக நினைத்தனர், ஆனால் பிக் பாஸ் பக்கம் போன பிறகு தான் ஜூலியின் உண்மை முகம் தெரிந்தது இந்த சூழலில் எந்த நாளில் பிரதமருக்கு எதிராக போலியாக கோஷம் போட்டார்களோ அதே நாளில் அதே மதுரை மண்ணில் கால் பதிக்கிறார் பிரதமர். இப்போது ஜூலி போன்ற நபர்கள் எங்கே இருக்கிறார்கள் என பலரும் தங்கள் கேள்வியை எழுப்பி வருகின்றனர்.