Tamilnadu

லீக்கானது ஆடியோ..! கோவை ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி - தற்கொலை செய்துக்கொண்ட மாணவி பேசிய முக்கிய தகவல் !

muthuchakaravarthi
muthuchakaravarthi

கோவையைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் இந்தப் பள்ளியில் தொடர்ந்து படிக்க தனக்கு விருப்பமில்லை. வேறு பள்ளியில் சேர்த்து விடுமாறு தனது பெற்றோரிடம் மாணவி கூறி உள்ளார். இதையடுத்து அவரை அவரது பெற்றோர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் சேர்த்தனர்.


இந்தநிலையில் மாணவி கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்குத் திரும்பிய பெற்றோர் தங்களது மகள் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு உக்கடம் போலீஸ் நிலையத்தில் இருந்து கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும், அதில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி (வயது 31) உள்பட 3 பேரின் பெயர்களை மாணவி குறிப்பிட்டு இருந்தது தெரியவந்தது.இதனையடுத்து போலீசார் மாணவியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில் ஆசிரியர் மிதுன்சக்ரவர்த்தி மாணவியிடம் வாட்ஸ்அப்பில் ஆபாசமான முறையில் தொல்லை அளித்ததற்கான ஆதாரங்கள் மற்றும் அவருடன் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர்.பின்னர் மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீசார் நேற்று மாலை கைது செய்து செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இரவு ஆஜர்படுத்தினர்.

கோவையில் சின்மயா வித்யாலயாயில் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவி, பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டதற்கு காரணமான பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இயற்பியல்  ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ சட்டத்தின் 2 பிரிவுகள் என மொத்தம் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மானவையும்  செல்போனில் பேசிய ஆடியோ வெளிவந்து உள்ளது.