சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் திரைபடம் கடும் சர்ச்சையை உண்டாக்கியுள்ள நிலையில் தற்போது திருமாவளவனுக்கு நாடி சொல்லி சூர்யா வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு வெந்த புண்ணில் வேலினை பாய்ச்சுவது போல் உள்ளதாக வன்னியர் அமைப்புகள் கொந்தளிப்பில் உள்ளனர் .
இன்று காலை வன்னியர் சங்கம் சூர்யாவிற்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றினை அனுப்பியது அதில் வன்னியர் சங்கம் ஜெய் பீம்' பட நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
5 கோடி இழப்பீடு கேட்டு வன்னியர் சங்க மாநில தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார், வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனவும் வன்னியர் சங்கம் எச்சரிக்கை விடுத்து இருந்தது சரியாய் இது குறித்த செய்தி வெளியான நேரத்தில் சூர்யா திருமாவளவனுக்கு நன்றி கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் மதிப்புக்குரிய திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கு…
மக்கள் தொகையில் மிக சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடியின நலன் சார்ந்து தாங்களும் தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கின்றது. தாங்கள் குறிப்பிட்டதை போல மாண்புமிகு தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மிகுந்த மனநிறைவை தந்துள்ளது.
பாதிக்கப்படும் மக்களின் பிரச்சினைகளை அனைவரிடமும் கொண்டு போய் சேர்ப்பது மட்டுமே ’ஜெய்பீம்’ திரைப்படத்தின் நோக்கம். கவனப்படுத்துவது மட்டுமே படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும் அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்கமூட்டும் தங்களது வார்த்தைகளுக்கு நன்றி என சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
சூர்யாவிற்கு ஜெய்பீம் திரைப்படம் குறித்து அன்புமணி எழுப்பிய கேள்விகளுக்கு பத்தி அறிக்கை கொடுத்த சூர்யா அறிக்கையின் இறுதியில் தங்கள் புரிதலுக்கு நன்றி என குறிப்பிட்டு இருந்தார் .. அதாவது ஜெய்பீம் திரைப்படம் குறித்து தவறாக அன்புமணி புரிந்து கொண்டுள்ளார் என பொருள்படும்படி அறிக்கை வெளியிட்டு இருந்தார் சூர்யா .
ஆனால் திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்த அறிக்கையில் ஊக்கமூட்டும் தங்களது வார்த்தைகளுக்கு நன்றி என குறிப்பிட்டு இருக்கிறார் , தற்போதுவரை ஏன் வன்னியர் அடையாளம் ஜெய் பீம் திரைப்படத்தில் பயன்படுத்த பட்டது என்ற எந்த விளக்கமும் அளிக்காத சூர்யா திருமாவளவனின் அறிக்கை ஊக்கபடுத்துகிறது என தெரிவித்து இருப்பது மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்ட வன்னியர் அமைப்பினை அதிர்ச்சியடைய செய்துள்ளது .