Cinema

பிரதமர் செய்த வரலாற்று சம்பவம் சூர்யாவை ஒப்பிட்டு விளாசும் நெட்டிசன்கள் !

suriya and modi
suriya and modi

பழங்குடியினர் இருளர் சமூகம் குறித்து திரைப்படம் எடுத்த சூர்யாவை சில. அரசியல் கட்சியினர் புரட்சி ஹீரோ என புகழ்ந்து வருகின்றனர், திருமாவளவன் போன்றோர் வானளவு புகழ்ந்து வருகின்றனர், ஆனால் சூர்யா பழங்குடியினர் கதையை வைத்து கார்ப்பரேட் ஆன அமேசான் கம்பெனிடம் படத்தை விற்று காசு பார்த்துள்ளார்.


இருளர் பழங்குடியினருக்கு டிரஸ்ட் மூலம் ஒரு கோடி கொடுப்பதாக தெரிவித்தார் ஆனால் அதுவும் எந்த அளவு உண்மை என தெரியவில்லை, நடிகர் லாரான்ஸ் திரைப்படத்தின் உண்மை நாயகன் போலீசார் சித்திரவதையில் உயிரிழந்த ராஜக்கண்ணு மனைவிக்கு வீடு கட்டி கொடுப்பதாக அறிவித்தார்.

அதன் பிறகு சூர்யா மீது விமர்சனம் எழுந்த பின்னர் 10 லட்சம் வைப்பு தொகையை பார்வதியம்மாளுக்கு கொடுப்பதாக தெரிவித்தார் சூர்யா.. உண்மையில் படத்தை எடுத்து சம்பாரித்த சூர்யா பழகுடியின நாயகன் என்றால் இன்று பிரதமர் மோடி செய்திருக்கும் சதானை பற்றி என்ன சொல்வது..,

பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் பிர்ஷா முண்டா இன்று அவரது பிறந்த நாள் இந்த "நாளை"   'ஜனஜாதிய கௌரவ திவாஸ்' என பூர்வகுடிகளை பெருமைப்படுத்தும் நாளாக மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது.'பிர்சா முண்டா' என்ற இணையற்ற வீரனின்,மண்ணின் மைந்தனின் பிறந்த நாளை இப்படி கொண்டாட அறிவிப்பு வெளியிட்டு அதனை நிகழ்தியும் காட்டியுள்ளார் பிரதமர்.

இது குறித்து எழுத்தாளர் சுந்தர் ராஜா சோழன் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :- சுதந்திர போராட்டம் என்பது வெறுமனே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மட்டுமே இல்லை.அது ஒரு பண்பாட்டு யுத்தம் என்பதை,ஜார்க்கன்ட்டில் தோன்றிய பிர்சா முண்டாவின் வாழ்கையில் இருந்துதான் நாம் பாடமாக கற்க வேண்டும்..

வெறுமனே ஆங்கிலேய அரசினை எதிர்த்தால் போதாது,அதை விட ஆபத்தானது மதமாற்றம் என்று மிஷனரி பணிகளை எதிர்த்தார் பிர்சா முண்டா.பழங்குடி மக்களை மதமாற்றுவதன் மூலம் நடப்பது பண்பாட்டு படையெடுப்பு என்பதை ஆழமாக உணர்ந்து கொண்டு தர்மயுத்தத்திற்கு தயார்படுத்தினார் மக்களை..

குரு குலமான கௌரவர்களுக்கு துணையாக நின்ற போர் சமூகமாக முண்டா பழங்குடி சமூகம் தங்களை நினைக்கிறது.இந்த தொன்மத்தை ஆழமாக நம்பிய பிர்சா முண்டா,வைணவத் துறவியான ஆனந்த் பானே என்பவரின் சிஷ்யராக ஆனார்.துளசியை வணங்கி,புலால் - மதுவை நீக்கி,பூணூல் அணிந்தார்.தன் மக்களுக்கு ராமயாண,மகாபாரத கதைகளை பழையபடி கற்றுக் கொடுக்க ஏற்பாடுகளை செய்தார்.

ஜெஸ்யூட்டுகளால் மதம் மாற்றப்பட்ட ஆதிகுடிகளை மீண்டும் தாய் மதத்திற்கு கொண்டு வந்தார் ஆங்கிலேய அரசு,அதன் ஏகாதிபத்தியத்திற்கு துணையாக நின்ற ஆதிக்க ஜமீன்கள்,மதம் மாற்றம் செய்யும் மிஷனரிகள் இது மூன்றிற்கும் எதிராக பூர்வகுடிகளை ஒன்று திரட்டிய மாவீரன் பிர்சா முண்டா ஆவார்..

இன்று ஒவ்வொரு ஹிந்துவும் பிர்சா முண்டாவின் வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும்.அதை நவீன ஜனநாயக,விஞ்ஞான கண்கொண்டு பார்க்க வேண்டும்..பகவான் பிர்சா முண்டா நாமம் வாழ்க!

பாரதத் தாயின் புகழ் ஓங்குக! என குறிப்பிட்டுள்ளார் சுந்தர் ராஜா சோழன் . பழங்குடியின மக்களின் தலைவரை கண்டறிந்து நாடு முழுவதும் கொண்டாட செய்யும் பிரதமர் எங்கே, பழங்குடியின மக்களின் வாழ்க்கை வரலாற்றை சொல்வதாக கூறி அதிலும் பெயரை மாற்றி மாற்றி சர்ச்சையை உண்டாக்கி பணத்தை சம்பாரிக்கும் சூர்யா எங்கே என கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் ஒரு தரப்பு.