கவிஞர் தாமரை பிரபலமான பாடல் ஆசிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கும், மேலும் அவ்வப்போது உண்மையான நாத்திகம் என்ன. எனவும் சில அரசியல் கருத்துக்களையும் தெரிவித்து வருவது வழக்கம் அந்த வகையில் தாமரையின் சமூக வலைத்தள பக்கங்கள் முக்கியத்துவம் பெற்றே வந்துள்ளன.
அந்த வகையில் அதே சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் அவருக்கு எதிராகவே ஒரு குழு செயல்பட்டு இருக்கிறது இது குறித்து கவிஞர் தாமரை அவரது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, பணிச்சுமையால் நான் சமூக வலை தளங்களில் அதிகம் இயங்குவதில்லை. முகநூல் மட்டுமே நான் அதிகமாகப் புழங்கும் தளம் ஆனால்,
இந்த என் இல்லாமையைப் பயன்படுத்தி சிலபல வீணர்கள் என் பெயரில் போலிக் கணக்குகளை உருவாக்கி இயக்கி வந்திருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, முகநூலில் இருந்த அதுபோன்ற பத்துக்கும் மேற்பட்ட கணக்குகளை நீக்கினேன். இன்ஸ்டா மற்றும் டுவிட்டரிலும் போலிகள் இருந்ததால் அவற்றை நீக்கியதுடன்.
அதற்காகவே என் மெய்யான கணக்குகளைத் தொடங்கினேன். தொடங்கினேனே தவிர அவற்றில் இயங்க முடியவில்லை. டுவிட்டரில் ஒன்றைப் பதிவதற்குள் போதும் போதுமென்றாகிறது. இன்ஸ்டா வைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். படங்களோடுதான் பதிவிடவே இயலுமாம் . எனவே கணக்குத் துவங்கியது, பதிவிடுவது உள்ளிட்டவற்றை சமரன் செய்து வந்தான்.
ஆனாலும் ஒவ்வொரு முறையும் அவனிடம் சொல்லி அதைச் செயல்படுத்தி, கண்காணித்து... நடைமுறையில் சரிவரவில்லை. தற்சமயம் பெருவெற்றி பெற்றுள்ள மல்லிப்பூ பாடலை இன்ஸ்டாவில் பதிய முயன்றேன் ம்கூம் ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் அதே பாடலை அங்கே ஆயிரக்கணக்கானோர் பதிவிட்டு மகிழ்ந்துள்ளனர் .
அண்மையில் என் பெயரில் இயங்கி வந்த ஒரு போலிக்கணக்கு டுவிட்டர் என் பார்வைக்கு வந்தது - thamarai_writes என்ற பெயரில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இரசிகர்களை வைத்து என் பதிவுகளைத் திருடி அதில் வெளியிட்டுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் நான் பதியாததையும் பதிந்து எனக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தியுள்ளனர். இரசிகர்கள் நானென்று நினைத்து அவர்களோடு உரையாடி வந்திருக்கின்றனர்.
தற்சமயம் சமூக வலைதள விற்பன்னர்களான ஒரு நிறுவனத்திடம் சொல்லி இதற்கொரு தீர்வு கண்டேன். போலிக்கணக்கை முடக்கியதோடு எனக்கும் ஆதாரபூர்வமான கணக்கைப் பெற்றுத் தர முயற்சி எடுத்திருக்கிறார்கள். என் சமூகதளங்களின் இயக்கத்தை அவர்களிடம் ஒப்படைக்க இருக்கிறேன். மக்கள் பெருவலங்களுக்கு (பிரபலம்) ஒருகட்டத்தில் இது தவிர்க்க முடியாததாகிறது.
என் கணக்கை முறையாகப் பதிந்தவுடன் அந்த நிறுவனத்தின் பெயரை அறிவிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மல்லி பூவிற்கே போலி கணக்கு மூலம் பூ சுற்ற பார்த்த நபர்களை கண்டறிந்து நீக்கம் செய்துள்ளார் கவிஞர் தாமரை.