Cinema

தமிழ் சினிமாவில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்... முடிவிற்கு வருகிறது லெப்ட் மோட்...!


தமிழ் சினிமா துறையினர் சமீபத்தில் நடந்த இரண்டு முக்கிய மாற்றங்களை பார்த்து அரண்டு போயுள்ளனர், வழக்கமாக கடந்த 10 ஆண்டுகள் தமிழ் சினிமா பாணி என்பது ஏதேனும் ஒரு வகையில் திராவிட அரசியல் அல்லது சமூகம் சார்ந்த அரசியலை மைய படுத்தியே அமைந்துள்ளது.


தங்களை பெரியாரிஸ்ட்களாகவோ அல்லது அம்பேத்கரிஸ்ட்களாகவோ  காட்டிக்கொள்ளும் நபர்களின் சினிமாக்கள் மிகப்பெரிய அளவில் இலவச விளம்பரங்கள் ஊடகங்கள்  மூலம் கிடைத்து வந்தன, அதை ஒட்டி சர்ச்சைகள் அல்லது இலவச விளம்பரங்கள் கிடைக்க எளிதில் திரைப்படத்தை   ஓட்டி வந்தனர்.

இந்த சூழலில் தற்போது அந்த ட்ரெண்ட் அப்படியே மாறியுள்ளது, தமிழ் சினிமாவில் பெரியாரியம், கம்யூனிஸம் பேசக்கூடிய படங்கள் வியாபார ரீதியாக படுதோல்வியை சந்தித்து வருகின்றன, அதற்கு மாற்றாக திரவுபதி ருத்ரதாண்டவம் போன்ற படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகிறது.

இது ஒருபுறம் என்றால் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சினிமா துறையை, கதி என்று கிடந்த பலருக்கு தூக்கத்தைக் கெடுத்துள்ளது, தெலுங்கு திரைப்படங்களான பாகுபலி மற்றும் இன்ன பிற படங்கள் தமிழகத்தில் அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழகத்தில் சமூக மற்றும் வரலாற்று சார்ந்த சோழர் காவியமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினம் எடுத்திருந்தார்.

இந்தப் படத்தில் மணிரத்னம் தனது இடதுசாரிய கருத்துகளை திணிப்பார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனராம், ஆனால் அவற்றுக்கெல்லாம் மாற்றாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கதாநாயகர்கள் அனைவரும் நெற்றியில் திருநீறுடன் இருந்தது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது கடந்த 10 ஆண்டுகளில் இந்துக்கள் என்றாலும் நெற்றியில் திருநீறு அணிந்து அவர்களை ஏதேனும் காமெடி வகையில் சித்தரிப்பதாக தமிழ் படங்கள் வெளிவந்த வண்ணம் அதிகமாக இருந்தன. ஆனால் அவற்றை பொன்னியின் செல்வன் திரைப்படம் மாற்றியிருக்கிறது.

 இன்னும் சொல்லப்போனால் பல பொதுமக்கள் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடும் சூழல் உண்டாகியிருக்கிறது. இது இத்தனை நாள் திராவிட அரசியல் பேசி வந்த இயக்குனர்களை அதிர்ச்சியால் ஆழ்த்த முதல் ஆளாக எதிர்ப்பை பதிவு செய்தார் வெற்றிமாறன்.

வழக்கமாக சினிமா துறையில் வெற்றி மாறன் அல்லது அவர் கொள்கையை ஒத்த  சிலர் ஏதேனும் கருத்து தெரிவித்தால் அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பிலும் கருத்துக்கள் வரும். ஆனால் வெற்றிமாறன் தெரிவித்த கருத்துக்கு எதிராக சொந்த சினிமா துறையில்  பல்வேறு விதமாக எதிர்ப்புகள் கிளம்பின.

 இயக்குனர் பேரரசு தொடங்கி நடிகர்கள் சரத்குமார் ந, டிகை கஸ்தூரி, நடிகை குஷ்பூ, நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, சீரியல் நடிகர்கள், அரசியல்வாதிகள் என பலரும் வெளிப்படையாக வெற்றிமாறன் கருத்து எதிர்த்து கருத்து தெரிவித்தனர். ஒரு படி மேலே சென்று இந்து அமைப்புகள் வெற்றி மாறனுக்கு எதிராக கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வந்தனர்.

ஆனால் வெற்றிமாறனுக்கு ஆதரவாக அவர் எதிர்பார்த்த பலரும் குரல் கொடுக்காமல் அமைதி காத்து விட்டனராம், யாரெல்லாம் தனக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்கள் என வெற்றிமாறன் கருதினாரோ அவர்கள் எல்லாம் அமைதியாக இருந்ததன் பின்னணி தெரிய வந்துள்ளது.

 இப்போது இந்து மதத்தையோ அல்லது ஏதேனும் ஒரு சமூகத்துக்கு எதிராக திரைப்படங்கள் எடுத்தால் இலவச விளம்பரங்கள் கிடைக்கிறதோ  இல்லையோ படம் படுமோசமாக நஷ்டம் அடைகிறது, அவ்வாறான திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் எடுக்கும் இயக்குனர்களை குறிவைத்து புறக்கணிக்கவும் சமூகத்தில் ஆதரவு பெருகி வருகிறது.

இந்தி சினிமாவில் யாரெல்லாம் சூப்பர் ஸ்டார்களாக இருந்தார்களோ அவர்கள் எல்லாம் இப்போது சீரோவாக மாறி இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான அமீர்கான் திரைப்படம், அவர் வாழ்வில் இல்லாத அளவில் படு தோல்வியை கொடுத்துள்ளது. இதே நிலை தமிழகத்தில் உண்டாகும் சூழல் தெளிவாக தெரிய தொடங்கி இருக்கிறது.

இடதுசாரிய கருத்துக்களை பேசிவந்த தமிழ் சினிமா பாணி வலது சாரிய கருத்துக்களை நோக்கி நகர தொடங்கி இருப்பதாக சினிமா துறையில் உள்ள மூத்த அனுபவம் வாய்ந்த நபர்களே கருத தொடங்கி இருக்கின்றனர். இது இனி தமிழ் சினிமாவில் நாத்திகத்தை அழுத்தமாக பேசினால் காலம் தள்ள முடியாது என ஒரு குழு முடிவெடுத்து இருக்கிறதாம்.

அத்துடன் பல்வேறு திரைப்படத் தயாரிப்பாளர்களும் சென்சிடிவான விஷயத்தை எடுப்பதாக இருந்தால் தங்களை அணுக வேண்டாம் என கேட் போட்டு விட்டனராம்.

இதையடுத்து இனி தமிழ் சினிமாவில் பழைய காலங்கள் போன்று எந்த மதத்தையும் எந்த சமூகத்தையும் கொச்சைப்படுத்தாத  வகையில் திரைப்படங்களை எடுக்க பல  இளம் இயக்குனர்கள் முன் வருவதாலும் அவர்களையே முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் தேர்வு செய்வதாலும் இனி தமிழ் சினிமா கடந்த பத்து வருட பாணியில் இருந்து பின்னோக்கி  பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக முழுமையாக மாறும் எண்ணம் உண்டாகி இருக்கிறதாம்.

 நட்சத்திரம் நகர்கிறதோ இல்லையோ தமிழ் சினிமா இடதுசாரிகள் சிந்தனையில் இருந்து மெல்ல மெல்ல தனது நடுநிலையான பார்வைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறதாம், இனி வரும் காலங்களில் பல நாத்திகம் பேசிய நடிகர்கள் தங்கள் நெற்றியில் திருநீறுடன் தமிழ் சினிமாவில் வலம் வருவது உறுதி என அடித்துக் கூறுகின்றனர் சினிமா துறையை சேர்ந்தவர்கள்.