தென் இந்திய முதல்வர்கள் மாநாடு இன்று ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெறுகிறது, உள்துறை அமைச்சர் அமிட்ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தென் இந்திய மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள், தலைமை செயலாளர்கள், உளவு அமைப்பை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கு பெறுகின்றனர், நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த மாநாடு நடைபெறுகிறது.
இதில் இனி வரும் காலங்களில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடடிகைகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டு முக்கிய நடவடிக்கை எடுக்கப்படும், இந்த சூழலில் தமிழகத்தில் நடைபெறும் சில நிகழ்வுகள் குறித்து. உளவு அமைப்புகள் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர் அதில்.,
'தமிழகத்தில் பயங்கரவாதம் தலை துாக்க வாய்ப்புள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு கேரளாவை தாண்டும் அளவிற்கு தமிழகத்தில் ஊடுருவத் துவங்கி விட்டது' என சொல்லிஉள்ளதாம். மேலும், தமிழகம் தொடர்பாக மத்திய உள்துறை செயலரும் ரகசிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில், கொலை வழக்கில் சிக்கியுள்ள தி.மு.க., - எம்.பி.,க்கள் மற்றும் விடுதலைப் புலி பற்றிய சில முக்கிய விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் மதமாற்ற N.G.O அமைப்புகள் புதிது புதிதாக முளைத்து வருவதாகவும் தடை செய்யப்பட்ட N.G. O அமைப்புகள் ஆட்சி மாறியதால் புதிய பெயரில் தொடங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர், அத்துடன் சில தலைவர்கள் தொடர்ச்சியாக இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி வருகிறார்கள், அவர்களின் கூட்டத்திற்கு மாநில அரசு அனுமதி மறுத்தாலும் அதையும் மீறி கூட்டம் நடத்துகிறார்கள் அவர்கள் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்கிறது ஆனால் அவர்களை கைது செய்வதில்லை என பெயர், கூட்டம் நடைபெற்ற இடம், தலைப்பு, பேசிய பேச்சுக்களின் முக்கிய சாராம்சம் என ஒரு பட்டியலே போட்டு கொடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் மட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் ஆலோசனை நடத்தும் என்றும் தமிழக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் என்றால் தமிழகத்தை சேர்ந்த திமுக எம். பி களை சந்திக்க அமிட்ஷா மறுத்துவிட்டார் என்ற செய்தி டெல்லியில் பரபரப்பாக பேச படுகிறது, தி.மு.க.,வின் மூத்த எம்.பி.,க்கள் சிலர் சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால், அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை.
இத்தனைக்கும் நிதின் கட்கரி உட்பட மூத்த அமைச்சர்களை இந்த தி.மு.க., - எம்.பி.,க்கள் சந்தித்து அமித் ஷாவிடம் பேசி, தங்களுக்கு நேரம் ஒதுக்கித் தரும்படி வலியுறுத்தியுள்ளனர் . கட்கரி உடனே அமித் ஷாவை தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளார்.
ஆனால் அமிட்ஷா சந்திப்பது குறித்து எந்த பதிலும் சொல்லவில்லை, சொந்த விஷயங்கள் தொடர்பாக யாரையும் சந்திப்பதை அமித் ஷா விரும்புவதில்லை. தவிர இப்படி தனிப்பட்ட நபர் பிரச்னைகளை தீர்க்க, அரசியல்வாதிகள் சந்திக்க நேரம் கேட்டால் ஒதுக்குவதில்லையாம். இதை ஒரு கொள்கையாகவே வைத்து உள்ளார் அமித் ஷா.
மேலும் டெல்லியில் ஒரு மாதிரி அரசியலும் அதே நிலை தமிழகம் என்றால் வேறு திசையில் அரசியலும் செய்வது அமிட்ஷாவிற்கு பிடிக்கவில்லையாம், ஒன்று எதிர் நிலைப்பாடு கொண்டால் முழுமையாக எதிர்க்க வேண்டும் அதை விடுத்து டெல்லியில் சந்தித்தால் பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் போல் நட்பாக பேசுவது பிறகு தமிழ்நாட்டில் சென்று வேறு விதமாக பேசுவது அமிட்ஷாவிற்கு பிடிக்கவில்லையாம்.
இதனால் தான் திமுக எம். பி களை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது, விரைவில் இந்தியாவை புரட்டி போட்ட 2ஜி வழக்கின் மேல் விசாரணை, வர இருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த பதிவில் 2ஜி வழக்கு குறித்து டெல்லியில் நடைபெறும் உச்சக்கட்ட அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.
More news from tnnews24 digital facebook page