Cinema

"சாவி" விவகாரம் நடிகர் கமலை வெளுத்து எடுக்கும் திமுகவினர்...! இப்படி எழுதிட்டாரே!

kamala hasan and stallin
kamala hasan and stallin

நடிகர் கமலின் "விக்ரம்" திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியான நிலையில் அவரை திமுகவினர் கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர், நடிகர் கமல் எழுதி பாடிய பாடலின் சிங்கிள் ட்ராக் நேற்று வெளியிட பட்டது, இதில்  இடம்பெற்ற வரிகள் தான் சர்ச்சையை கிளம்பியுள்ளன.


பாடலின் ஆரம்பத்தில் `நீ எத்தினி குடிச்சாலும் இங்கு பட்டினி கூடாதே' என தமிழகத்தில் டாஸ்மாக் வியாபாரத்தை குறித்து எழுதியுள்ளார்,  நடுவில் வரும் 'கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே.. காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..' என்கிற வரிகள் ஆளும் திமுக அரசின் நிதி பற்றாக்குறை நிதி நிலை அறிக்கை குறித்து விமர்சனம் செய்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

இதன் பிறகு தான் முக்கியமான வரிகளே வருகின்றன. 'ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே என ஒன்றிய அரசு என மத்திய அரசை கூறியுள்ளார் என்கின்றனர், இதுவரை அமைதியான விமர்சனம் இப்போது அதிகரித்து சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே..'  என்ற வரிகள்தான் இப்போது கடுமையான விமர்சனத்தை திமுகவினர் முன் வைக்க காரணமாக அமைந்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததைதான் கமல்ஹாசன் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார் என  திமுகவினர் தங்கள் கருத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து எதிர்வினையாற்றி வருகின்றனர் எது எப்படியோ மொத்தத்தில் கமல் திரைப்படம் இலவசமாக விமர்சனம் மூலம் பிரபலமடைந்து வருவதாக கமல் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

ஆமாம் திருடன் கையில் சாவி என யாரை தான் கமல் சொல்கிறார் என்ற விவாதம்தான் இப்போது இணையதளத்தில் கடும் வைரலாக சென்று கொண்டு இருக்கிறது திரை படங்கள் அரசியல் பேசிய காலம் மாறி இப்போது பாடல்களில் அரசியல் வரிகளை சேர்த்து படத்தை ஓடவைக்கும் காலம் வந்து இருக்கிறதோ?