
சுதந்திர ம் அடைந்த நாட்டில் பெண்கள் அடிமையாக வாழ்ந்து வருகிறார்கள் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு...பாரதி கண்ட புதுமை பெண்ணாக பெண்கள் முன் வரவேண்டும்.... பல துறைகளில் அடி எடுத்து வைக்க வேண்டும்.. சாதிக்க வேண்டும்,..என்ற கருத்துக்களை பலர் பல மேடைகளில் கூறி கேட்டிருப்போம் ஆனால் அந்த கருத்துக்கள் அனைத்தும் தற்போது உண்மையாகி வருகிறது அதே சமயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் மட்டும் குறையவே இல்லை அவர்கள் அடிமையாக்கப்படுகிறார்களா என்று கேட்டால் இல்லை சில நேரங்களில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்! தீண்டாமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்! அதாவது தினந்தோறும் ஒரு செய்தி தாளில் சிறு குழந்தை முதல் வயதிற்கு வந்த இளம் பெண் வரை ஏதேனும் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு விட்டாள், பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது! பலாத்காரம் செய்து கொலை செய்து தப்பியோடிய குற்றவாளிகள்! திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றிய காதலன் தலைமறைவு என்ற ஒரு செய்தி இடம்பெறாமல் இருக்காது.
இதனால் பெண் குழந்தைகளை பெற்றிருக்கும் பெற்றோர்களுக்கும் குழந்தைகளை பெறப்போகும் பெற்றோர்களுக்கும் பெரும் பதற்றம் மற்றும் அச்சம் உள்ளது. அதே சமயத்தில் இது போன்ற குற்றங்கள் நடைபெறக்கூடாது என்பதற்காகவும் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் பல நடவடிக்கைகள் சட்ட ரீதியில் எடுக்கப்பட்டு கொண்டுதான் வருகிறது இந்த நிலையில் ஒரு பெண் சீரழிக்கப்படுவது குறித்தும் காதலிப்பதாக கூறிய ஏமாற்றுபவர்கள் குறித்தும் பிரபல இயக்குனர் பேரரசு ஆவேசமாக பொதுவெளியில் பட நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
அதாவது தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்ற பேரரசு எதிரும் புதிரும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிறகு நடிகர் விஜயின் திரைப்பட வாழ்க்கையில் மிக முக்கிய படங்களாக அமைந்திருக்கும் சிவகாசி திருப்பாச்சி ஆகிய இரண்டு வெற்றி படங்களை இயக்கிய வரும் இவரை மேலும் இவர் அஜித், விஜயகாந்த் மற்றும் பரத் ஆகியோரை வைத்து இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் இயக்கும் படங்கள் பெரும்பாலானவை ஊர்களின் பெயரைக் கொண்டு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் ரஞ்சித் நடிப்பில் உருவாகி இருக்கும் குழந்தை கேர் ஆஃப் கவுண்டம்பாளையம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு, நம்ம வீட்டு பொண்ணு ஒருத்தன் சீரழித்தால் என்ன கோபம் வருமோ அந்த கோபம் தான் இந்த படத்தை பார்க்கும் போது நமக்குள் ஒரு வேகம் வரும், ஒரு வசதி படைத்த பணக்கார வீட்டுப் பெண்ணை ஒருத்தன் ஏமாற்றி நடித்து சீரழித்தால் சரியா தவறா? இதுவே நாடக காதல் என்ற வகையில் பேசினார் மேலும் நாடக காதல் என்று கூறினால் எதற்காக உங்களுக்கு கோபம் வர வேண்டும் பிறகு ஏன் அதற்கு ஜாதி முத்திரை குத்துகிறீர்கள்! நாடக காதல் பண்ணுவதும் ஒரு பெண்ணை கற்பழித்து சீரழிப்பதும் ஒன்றுதான் இவ்விரண்டிற்கும் வேறுபாடே கிடையாது! இப்படி நாடக காதல் பண்ணுபவர்கள் இந்த ஜாதியா அந்த ஜாதியா என்று யோசித்து செய்கிறார்கள் ஆனால் பாதிக்கப்பட்டவர்களே இதில் வேதனை அடைகிறார்கள்!
ஒரு மனிதன் எந்த ஜாதி காரனாக இருந்தாலும் ஒரு பெண்ணை ஏமாற்றுகிறான் என்றால் அவன் ஒரு மனுஷ ஜாதியை கிடையாது வறுமையில் ஒரு பெண் இருக்கிறாள் கஷ்டப்படுகிற பெண்ணாக இருக்கிறாள் என்றால் அவளுக்கு வாழ்க்கை கொடு என்று கூறுபவன் மனுஷன் ஆனால் ஒரு பெண்ணை வழிக்கு கொண்டு வருவதற்கே கற்பழிக்க சொல்பவன் எவ்வளவு பெரிய மனுஷனாக இருக்க முடியும் என்று ஆவேசமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சினிமா வட்டாரங்கள் முழுவதும் கவனம் பெற்று வருகிறது. மேலும் நாடகக்காதல் பற்றி இயக்குனர் பேரரசு பேசியது சில குறிப்பிட்ட அரசியல் இயக்கங்களை சேர்ந்தவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது...