
பிரபல தொலைக்காட்சியில் முன்னணி காமெடியாக இருந்து வரும் அமுதவாணனின் உதவியாள் அந்த தொலைக்காட்சியில் அறிமுகமாகி கடந்த 2017 ஆம் ஆண்டில் கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் வெற்றி பெற்று அனைவரின் மனதிலும் இடத்தைப் பிடித்த காமெடி என்றால் கே பி ஒய் பாலா. மேலும் அதே தொலைக்காட்சியில் ஒரு பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் கோமாளியாக அறிமுகமாகி இன்றுவரையிலும் சூப்பராக தனது பணியினை தொடர்ந்து வருகிறார். மேலும் தற்பொழுது அவருக்கு திரைப்படங்களிலும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து அவற்றில் சிறப்பாக நடித்துக் கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் நடிப்பில் தனக்கு கிடைக்கும் பணத்தினை தனது செலவு போக மச்சான் அனைத்தையும் கஷ்டப்படுபவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து அவர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார். ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்தது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொழுது அவர்களுக்கு நிவாரணம், ஊனமுற்ற ஒருவருக்கு இருசக்கர வாகனம் எனத் தொடர்ந்து பல உதவிகளை செய்து கடைசியாக பெட்ரோல் பங்கில் வேலை செய்த ஒரு இளைஞன் பைக் வாங்க வேண்டும் என்று கூறிய ஒரு வீடியோவை பார்த்துவிட்டு அவருக்கும் பைக் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் செய்து வீடியோ இணையத்தில் சமீபத்தில் வைரலானது.
இவ்வாறு பல உதவிகளை செய்து அனைவரிடமும் பாராட்டுகளை பெற்று வந்தாலும் கூட சிலர் இவரை தவறாகவும் விமர்சித்து வருகின்றனர். இது போன்ற உதவிகளை எல்லாம் செய்வதற்கு பணம் எங்கே இருந்து வருகிறது?? ஒரு வேலை கருப்பு பணமாக இருக்குமோ?? என்றெல்லாம் கூறிவந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கே பி ஒய் பாலா இதற்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது!!நிறைய சமூகப்பணிகள் செய்து கொண்டு வருகிறீர்கள்!! வெள்ள பாதிப்பில் மக்கள் அவதிப்பட்டு வந்த பொழுது உணவினை கொடுப்பதே போன்று உதவிகளை செய்து வந்தீர்கள். பொதுவாக மற்றவர்களுக்கு இது குறித்து ஏதேனும் கருத்து சொல்ல விரும்புகிறீர்களா என்று பத்திரிக்கையாளர் பாலாவிடம் கேட்ட பொழுது, கருத்து சொல்லும் அளவிற்கு இன்னும் நான் பெரிய ஆளாக ஆகவில்லை என்றும், என்னால் முடிந்ததை செய்வேன் என்றும், நான் யாரையும் அழைக்கவில்லை அவர்களாகவே என் உடன் வருகிறார்கள் என்றும், மற்றவர்களை நான் தான் பாராட்ட வேண்டும்.
அவர்கள் என்னை பாராட்ட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும் சாதாரண மக்களின் கோரிக்கைகளை நடத்தி கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்றும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது குறித்தும் அவர் நல்லது செய்வாரா என்பதை குறித்தும் பத்திரிக்கையாளர் கேள்வியை எழுப்பினார். இதைத் தொடர்ந்து எல்லோருமே நல்லது தான் செய்கிறார்கள் என்றும் அவர்கள் எல்லோரும் பெரியவர்கள் அதைப் பற்றி கூறுவதற்கு எனக்கு தகுதி இல்லை என்றும் பாலா பதில் அளித்தார். மேலும் இப்படி நான் உதவி செய்வதற்கு காரணம் என் பின்னால் மிகவும் கஷ்டப்படும் மக்கள் இருப்பது தான் என்றும், எனக்கு லாரன்ஸ் சார் மிகவும் உதவியாக இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த உதவிகளை எல்லாம் நான் கருப்பு பணத்தை வைத்து செய்கிறேன் என்று கமெண்ட்களை கூறி வந்தனர். ஆனால் நான் கருப்பு பணத்தை வைத்து எல்லாம் செய்யவில்லை!! வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் இது போன்ற உதவிகளை செய்து வருகிறேன் என்றும், இன்ஸ்டாகிராம், பிரமோஷன் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் பணத்தில் தான் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்!! மூன்று வேலை சாப்பாடு கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன் தற்பொழுது அது கிடைத்துவிட்டது. அதுபோக மற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறேன் என ஒரு உள்ளார்!! இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது!! மேலும் கருப்பு பணம் வைத்துள்ள பல நடிகரகளை பாலா கலாய்ததுவிட்டார் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது....