நடிகர் சூர்யா நடிப்பு மற்றும் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது, 90'களில் கடலூர் மாவட்டத்தில், கம்மாபுரம் என்ற காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவர் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்டார்.
"அவரது" உடலை திருச்சி மாவட்ட எல்லையில் போலீசார் தூக்கி எறிந்து, ராஜா கண்ணு தப்பி ஓடிவிட்டதாக நாடகமாடினர் ராஜா கண்ணுவின் மனைவி "பார்வதி", சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற சந்துரு, வக்கீலாக பணி செய்த போது இந்த வழக்கிற்காக சட்டப் போராட்டம் நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்தார் இந்த கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான் ஜெய்பீம்
இந்த சூழலில் ஜெய்பீம் திரைப்படத்திற்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டு பக்கமும் விமர்சனங்களும் ஆதரவும் பிரபலங்கள் முதல் சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் உருவாகிவரும் சூழலில்.., தேசியதுப்புரவு ஆணைய தலைவர் மா வெங்கடேசன் ஜெய்பீம் திரைப்படம் குறித்து இரண்டே வரியில் தனது கருத்தை தெரிவித்து இருப்பது கவனத்தை பெற்றுள்ளது,
இதுகுறித்து அவர் தெரிவித்த தாவது ஜெய்பீம் திரைப்படம் உணர்த்துவது என்ன? கிட்டத்தட்ட 54 வருட திராவிட ஆட்சியில், அதுவும் காவல்துறையை முதல்வர்களே கவனிக்கும் துறையாக இருந்தும் எஸ்சி மக்கள் முதல் இருளர்கள் வரை சமூகநீதி, சமத்துவம் கிடைக்கவில்லை என்பதைத் தான் இப்படம் உணர்த்தி இருக்கிறது.
ஆனாலும் தமிழ்நாடு ஈவெரா மண், சமூகநீதி மண் என்று சொல்வதில் இருக்கிறது ஏமாற்று அரசியல் என பொட்டில் அடித்தார் போல் கூறியுள்ளார் வெங்கடேசன். வெங்கடேசன் தெரிவித்த கருத்துக்கள் விவாதத்தை எழுப்பியுள்ளன தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகளின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என வெளிச்சம் போட்ட திரைப்படம்தான் ஜெய்பீம் என திராவிட கட்சிகளின் ஆட்சியை எதிர்த்துவரும் நபர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.