Cinema

உண்மையை சொன்னால் என்ன "இழவு" வந்துவிட போகிறது "மீண்டும்" கடும் எதிர்ப்பை பதிவு செய்த எழுத்தாளர்!

sundarraja cholan
sundarraja cholan

ஜெய்பீம் திரைப்படம் திட்டமிட்டு விளம்பர நோக்கத்திற்காக மட்டுமல்லாமல் ஒரு தரப்பை குறிவைத்து தாக்குவதாக கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் திரைப்படத்தில் வன்னியர் சமுதாய அடையாளத்தை நீக்கியது ஜெய் பீம் படக்குழு இந்த நிலையில் வன்னியர் அடையாளத்தை அந்த இடத்தில் நீக்கிவிட்டு இந்து கடவுள் காலண்டரை திரையில் காட்சி படுத்தி இருப்பது மீண்டும் படகுழுவிற்கு எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது.


இந்த சூழலில் பிரபல எழுத்தாளர் சுந்தர் ராஜ சோழன் இதுகுறித்து மிக காட்டமாக விமர்சனம் செய்துள்ளார் அவை பின்வருமாறு :-வன்னியர்களின் தீவிரமான எதிர்ப்புக்கு பின் 'அக்னி சட்டி' மற்றும் வன்னியர் சங்க அடையாளங்கள் இந்து தெய்வ அடையாளமாக மாற்றப்பட்டுள்ளது..ஒரு உண்மை கதையை எடுக்கும் போது அதை உண்மையாகவே காட்டுவதில் என்ன இழவு பிரச்சனை வந்துவிடும்? 

இவர்கள் சொல்கிற நபர் அந்தோணிசாமி என்கிற போது,அதே அடையாளங்களை அப்படியே வைப்பதில் என்ன பிரச்சனை? கெட்டவர்கள் எல்லோரும் தீவிர இந்து என்று கூசாமல் சொல்கிறார்கள், அதுவும் உண்மை கதையை திரித்து.எப்பாடுபட்டாவது ஒரு இந்து கொடூரனாக இருக்க வேண்டும் என்பது புரட்சியின் மாறாத சட்டமா?

ஜாதி என்றால் கேள்வி கேட்டு பொங்கும் நாம் யாரும், மதம் அவமானப்படுத்தப்படும் போது வாய் திறக்கமாட்டோம். அதை சிரித்தப்படியே நமக்கென்னவென்றுதான் இருக்கப் போகிறோம். சில தசாப்தங்களாக இங்கே பிராமணர்களும், இந்து மதமும் அவமானப்படுத்தப்பட்டு வரும் சினிமாக்களை நாம் சிறிதும் கேள்வி கேட்டதில்லை ஆனால் நம் ஜாதி இழிவுபடுத்தப்பட்டால் கிளர்ந்துவிடுவோம்.அதை இதர சாதிக்காரன் கண்டு மகிழ்வான்.

பிராமணனை தாக்கும் போது வேடிக்கை பார்த்தவர்கள் எல்லோரும், பசுக்கூட்டத்தை சிங்கம் வேட்டையாடிய கதையை நினைவில் நிறுத்துங்கள் நாம் தனித்தனியாக பிரிந்து பிறர் வீழ்ச்சியை கண்டு மகிழ்வது எல்லாம் நமக்கு நாமே தோண்டும் சவக்குழி என்பதை மறக்காதீர்கள். முதலில் தாக்கப்பட்டவன் பிராமணன் அவ்வளவுதான் என வேதனையாக பதிவு செய்துள்ளார்.

படக்குழு நினைத்தால் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கி இருக்கலாம் அல்லது அப்படியே அந்த இடத்தை கிராப் செய்து இருக்கலாம் ஆனால் அங்கு திட்டமிட்டு இந்து தெய்வத்தின் புகைப்படத்தை வைத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது, அதோடு உண்மையாக கொலை செய்தவர் அந்தோனிசாமி என்ற கிறிஸ்தவராக இருக்கும் போது ஏன் குரு எனவும் இந்து எனவும் அடையாளப்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வியாபார ரீதியாக வெற்றி பெறவேண்டும் என்ற காரணத்திற்காக இந்து மதத்தை உள்ளே இழுத்து நம்பிக்கையில் விளையாடுகிறார் சூர்யா என கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.