Cinema

கைது செய்யப்படுகிறாரா விஜய் சேதுபதி? ஏன் அடித்தேன் விஜய் சேதுபதியை அடித்தவர் பரபரப்பு பேட்டி!

maga gandhi
maga gandhi

விஜய் சேதுபது விமான நிலையத்தில் அடிவாங்கிய சம்பவம் தமிழக ஊடகங்களை தாண்டி தேசிய ஊடகங்களிலும் எதிரொலித்தது வழக்கமாக நாடக நடிகர்கள் தக்காபட்டாலே உள்ளூர் மீடியா முதல் தேசிய மீடியா வரை நாட்டில் சகிப்பு தன்மை இல்லையா என மூன்று நாட்களுக்கு விவாதம் நடத்துவார்கள் ஆனால் விஜய் சேதுபதி தாக்கப்பட்ட செய்தி குறித்து எந்த ஊடகமும் விவாதம் நடத்தவில்லை.


மேலும் அடிவாங்கியதாக வெளியான வீடியோ வெளிவந்த பின்பும் விஜய் சேதுபதி தரப்பு காவல்நிலையத்தில் புகாரோ அல்லது  சட்ட ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்காத போதே பலரும் சந்தேகத்தை எழுப்பினர் இந்த சூழலில் அதற்கான விடை கிடைத்துள்ளது, விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்திய நபர் கேரளாவை சேர்ந்தவரோ அல்லது கர்நாடகாவை சேர்ந்தவரோ கிடையாது தமிழகத்தை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார்.

இளையபாரதம் யூடுப் சேனலுக்கு பேட்டி அளித்த மாக காந்தி என்பவர் நான் தான் விஜய் சேதுபதியை அடித்தேன்,  விமான நிலையத்தில் அவரை பார்த்த நான் தேசிய விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் என கூறினேன் இதெல்லாம் தேசமா என கேட்டார், நான் ஒரு தேசியவாதி தேசத்தை மதிக்கும் தேவர் வழியில் வந்தவன்.

மேலும் தேவர் குரு பூஜைக்கு வருவீங்களா என கேட்டேன் அதற்கு யார் தேவர் என தவறாக பேசினார், இதுகுறித்து கேள்வி எழுப்பிய என்னை அடிக்கவும் செய்தனர், இனிமேலும் பொறுத்து கொள்ள கூடாது என்றுதான் அடித்தேன், என்னை அடித்தார் திருப்பி அடித்தேன் தேசத்தையும், தேவரையும் தவறாக பேசியதால் அடித்தேன் என மாகா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது, தேசத்தையும், மக்கள் மதிக்கும் தலைவர் தேவர் குறித்தும் அவதூறாக பேசிய விவகாரம் வெளிவந்த காரணத்தால் விஜய் சேதுபதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அத்துடன் இந்த விவகாரம் வெளிவந்தால் தங்கள் சினிமா தொழிலுக்கு ஆபத்து உண்டாகலாம் என்பதால் விஜய் சேதுபதி தன்னை அடித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஒதுங்கி இருக்கிறார் நியாயப்படி விஜய் சேதுபதியை தான் கைது செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது விமான நிலையத்தில் வைத்து இந்தியாவை தேசமா இது என கேட்ட நபருக்கு தேசிய விருது வழங்கலாமா என்ற கேள்வியும், உடனே தேசிய விருதை திரும்பி பெறவேண்டும் எனவும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன, இந்த சூழலில் தனியாக சென்ற நபரை தாக்கியது, தேசத்தை அவமதித்தது மேலும் சமுதாய தலைவர் தேவர் குறித்து அவதூறாக பேசியது போன்ற சம்பவங்கள் உண்மையா என ஆராய்ந்து விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கைது நடவடிக்கையில் பெங்களூர் காவல்துறை ஈடுபட வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் பட்சத்திலும், விமான நிலையத்தில் நடைபெற்ற அடிதடி காட்சிகள் வெளியானால் நிச்சயம் விஜய் சேதுபதி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.விஜய் சேதுபதி தரப்பு அமைதியாக இருக்கும் போதே இதில் பெரிய விஷயம் இருக்கும் என்று வெளியான தகவல் தற்போது வெளிவந்துவிட்டது.