உடுமலை கௌசல்யா என்றால் தமிழகத்தில் பலருக்கு தெரிந்த விஷயம் சங்கர் என்பவரை காதல் திருமணம் செய்த நிலையில் சங்கரை கௌசல்யா குடும்பத்தினர் கொலை செய்ய அந்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் கவனத்தை பெற்றார், சங்கர் இறந்த ஒரே வருடத்தில் இன்னொரு நபரை திருமணமும் செய்து கொண்டார், இதனால் சங்கர் குடும்பமும், கௌசல்யா பெற்றோரும் பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்.
மேலும் கருணை அடிப்படையில் அரசாங்க வேலையில் இருந்த கௌசல்யா, இந்திய ஒருமை பாட்டிற்கு எதிராக பேசிய நிலையில் சஸ்பென்ட் செய்யப்பட்டார் அதன் பிறகு பல்வேறு குற்றாசட்டுக்கள் எழ அமைதியானவர்தான் கௌசல்யா. இந்த சூழலில் நடிகயை பார்வதியை அழைத்து வந்து அழகு நிலையம் ஒன்றை திறந்துள்ளார் கௌசல்யா அதில் கலந்து கொண்ட நடிகை பார்வதி, கௌசல்யாவை புகழ்ந்து பேசியது ஆச்சர்யத்தை உண்டாக்கியது.
கோவையை அடுத்த வெள்ளலூரில் உடுமலைப்பேட்டை ஆணவப் படுகொலையில் பாதிக்கப்பட்ட கவுசல்யா அழகு நிலையத்தை இன்று திறந்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகை பார்வதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை பார்வதி, "கவுசல்யா போன்ற பெண்களுக்காக நான் இங்கே வந்திருக்கிறேன். காதலிப்பதற்கும் அவர்கள் வாழ்க்கையை வாழ்வதற்கும் பெண்களுக்கு முழு உரிமை உண்டு.
பெண்களின் உரிமையைச் சிலர் திருட பார்க்கிறார்கள்.கவுசல்யா அவருக்கென ஒரு தனி இடத்தை பிடித்து, நிஜ வாழ்க்கை ஹீரோவாக திகழ்கிறார். அவரது வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்தால் அதற்கு நான் துணை நிற்பேன். ஆணவ படுகொலைகளுக்கு எதிராக வெளிவரும் படங்கள் வரவேற்கத்தக்கன. கவுகசல்யா வாழ்க்கை, பயணம், போராட்டங்கள் உள்ளிட்டவை குறித்து செய்திகள் படிப்பதன் மூலமாக அறிந்து கொண்டேன். வழக்கமாக இதுபோன்ற கடை திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கு நான் செல்வதில்லை. ஆனால் இங்கு ஒரு புது வாழ்க்கையை துவங்குகிறார்கள்.
அதனைக் கொண்டாட வந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.தமிழில் ஏன் அதிகப் படங்களில் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ''காதல் கதைகளில் நடிக்க மட்டுமே அழைப்புகள் வருகிறது. திரும்பத்திரும்ப நான் காதலிக்கும் படியான பெண்கள் கேரக்டர்கள் கிடைத்தது. வித்தியாசமான கேரக்டர் எனக்கு கிடைக்கவில்லை. அதனால் மக்களுக்கு சலிப்பு ஏற்படும் என்பதால் ப்ரேக் எடுத்துக் கொண்டேன்” எனத் தெரிவித்தார்.கவுசல்யா வாழ்க்கையை படமாக்கினால் நீங்கள் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “நான் நடிப்பேனா எனத் தெரியவில்லை. அப்படி ஒரு ப்ராஜ்க்ட் இருந்தால் என்னால் முடிந்த சப்போர்ட் பண்ணுவேன்” எனப் பதிலளித்தார்.
கௌசல்யா கதாபாத்திரத்தில் தான் நடிக்க போவது இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி பைனல் ட்விஸ்ட் அடித்து சென்றுள்ளார் நடிகை பார்வதி என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.