Cinema

விஜய்யை பற்றிய கருத்து... சஞ்சீவ் பதிலுக்கு கடுப்படையும் விஜய் ரசிகர்கள்!!

VIJAY
VIJAY

தமிழ் தொலைக்காட்சிகளில் சின்னத்திரையின் முக்கிய மற்றும் முன்னணி ஹீரோவாக அறியப்படுகின்ற சஞ்சீவ் 2002ல் மெட்டி ஒளியின் முதல் சின்னத்திரை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதோடு 2007 முதல் 2013 கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட திருமதி செல்வம் என்ற சீரியல் மூலம் செல்வமாக அனைவரது வீட்டிற்குள்ளும் புகுந்து பல ரசிகர்களை பெற்றவர். இதற்காகவே பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இதைத் தவிர யாரடி நீ மோகினி, கண்மணி என்ற சீரியல் வெளிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர். இதைத்தவிர சஞ்சீவ் தமிழ் சினிமாவின் சில குறிப்பிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் மேலும் இவரது நடிப்பு பெரும்பாலும் விஜயை போன்ற இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது இதற்கு காரணம் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற காரணமா என்றும் பல நேரங்களில் பேசப்பட்டுள்ளது. 


அதாவது சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் சஞ்சீவ் மற்றும் நடிகர் விஜய் இருவரும் சேர்ந்து ஒன்றாக விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளனர் அதோடு இன்றளவுக்கும் இவர்களது நட்பு நீடித்து வந்துள்ளது. முன்னதாக 2009ல் நடிகை ப்ரீத்தி சீனிவாசனை திருமணம் செய்து கொண்ட சஞ்சீவிற்கு லயா மற்றும் ஆதவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். பொதுவாக சஞ்சீவ் கலந்து கொள்ளும் பேட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் விஜய் பற்றி பேசாமல் இருந்தது இல்லை அதே சமயத்தில் சஞ்சீவ் வருகிறார் என்றால் அவரிடம் விஜய் குறித்து கேள்வியை ஒரு தொகுப்பாளர் கேட்காமல் இருந்ததில்லை, ஏனென்றால் விஜய் ஒரு குறுகிய நண்பர்கள் வட்டாரத்தையே வைத்துள்ளார் அதில் சஞ்சீவ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் சினிமா வட்டாரத்தில் உள்ளனர். 

மேலும் விஜயுடன் சந்திரலேகா, புதிய கீதை, பத்ரி மற்றும் நிலவே வா ஆகிய படங்களில் சஞ்சீவ் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பல வருடங்களுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் சஞ்சீவ் மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து நடித்தனர். அதே சமயத்தில் சஞ்சீவி நடிப்பானது விஜயின் நடிப்பை போன்ற ஒத்து இருப்பதால் பெரும்பாலான நேரங்களில் விஜய் ரசிகர்களே சஞ்சீவை கடுமையாக டிரால் செய்து வீடியோக்களை வெளியிடுவார். இதற்கு தற்போது சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் சஞ்சீவ் விளக்க அழைத்து பேசியுள்ளார். அதாவது விஜய்யே ஒரு முறை என்னிடம் இது குறித்து பேசியிருக்கிறார், நீ நடிப்பது வசனம் பேசுவது எல்லாம் என்னைப் போன்றே இருக்கிறது தினமும் நீ சீரியலில் நடிக்கிறாய் ஆனால் நான் வருடத்திற்கு ஒரு படம் நடிக்கிறேன் இதனால் பார்ப்பவர்களுக்கு நான் தான் உன்னைப் போன்று நடிக்கிறேன் என்று பேசப் போகிறார்கள் என ஜாலியாக தன்னிடம் கூறியதாக சஞ்ஜீவ் இதில் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி நான் வேண்டுமென்றே விஜய் போன்று நடிக்கவில்லை எதார்த்தமாக நான் நடிப்பது விஜய் மாதிரியே இருக்கிறது. அதோடு நான். சீரியலில் நடிக்கும் பொழுது ஒரு எமோஷனலான சீன் எடுக்கப்படும் பொழுதும் நான் விஜயை போன்று எமோஷனல் ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டா நடிக்க முடியும் எனக்கு அதுவாகவே வருகிறது என்று சஞ்சீவ் அந்த பேட்டியில் கூறியுள்ளார், தற்போது இந்த வீடியோ மீண்டும் வைரலாக தொடங்கியுள்ளது அதோடு இதற்கு விஜயின் ரசிகர்கள் விமர்சனங்களை அள்ளி தெளித்துள்ளனர். அதாவது விஜயின் ரசிகர் ஒருவர், இவனை பார்த்தாலே எரிச்சல் தான் வருது.. நீ முதல் ல எங்க அண்ணண அவன் இவன் னு பேசுறத நிறுத்துடா.. இவனுக்கு விஜய் ப்ரன்டா அமைஞ்சது விஜய் முன் ஜென்மத்துல செஞ்ச பாவம் .. இவனோட  ஆழ்ழ்ழ்ழ் மனசுல இவனே இவனை விஜய் னு நெனைச்சு வச்சிருக்கான் ... விஜயே வந்து சொன்னாலும் நம்ப மாட்டான் என சஞ்சீவி பங்கம் செய்து வருகின்றனர்.