Cinema

பிஜேபிக்கு தந்தை மூலம் தூது விட்டாரா விஜய்!!

VIJAY
VIJAY

தமிழக அரசியல் கவனம் மொத்தமும் தற்போது விஜயை நோக்கி கிளம்பி இருக்கிறது ஏனென்றால் மக்கள் இயக்கத்தின் மூலம் தொடர்ச்சியாக பல மக்களுக்கு வேண்டிய சேவைகளை செய்து வந்த விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்ததோடு 2026 இல் களம் காண உள்ளதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் அம்பேத்கர் சிலைக்கு மாலை இடுதல், உலக பட்டினி தினத்தன்று தனது இயக்க நிர்வாகிகள் மூலம் அன்னதானம் வழங்குதல், பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்குதல் போன்றவற்றை செய்தார். அதேபோல இந்த வருடமும் அம்பேத்கரின் சிலை மற்றும் அன்னதானம் வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.


அது குறித்த செய்திகள் வெளியானது, இதனைத் தொடர்ந்து பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை தொகுதி வாரியாக தேர்ந்தெடுத்து விஜய் பரிசு கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து தனது அறிக்கையிலும் விரைவில் சந்திப்போம் என்று விஜய் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் விஜய் அரசியல் கட்சியை அறிவித்ததிலிருந்தே அவர் சீமானுடன் இணைவார் சீமான் கட்சியின் கொள்கைகளும் அவரது கட்சியின் கொள்கைகளும் ஒத்து காணப்படுகிறது என்ற வகையிலான பேச்சுகள் அரசியல் வட்டாரம் முழுவதும் பேசப்பட்டது. அதனையே பத்திரிகையாளர்களும் சீமானிடம் முன்வைத்த பொழுது விஜய் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் நாம் தமிழர் கட்சி தயாராக இருப்பது போன்ற வகையில் பதில் அளித்ததும் அரசியல் வட்டார முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் அதற்கு இதுவரை விஜய் தரப்பிலும் தமிழக வெற்றி கழகம் தரப்பிலும் எந்த வித தகவல்களும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விஜயின் தந்தையான சந்திரசேகர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு பாஜக நிர்வாகி உடன் சென்றுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. அதாவது கடந்த சிலர் தினங்களுக்கு முன்பே விஜய் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது தாய் மற்றும் தந்தை இருவரையும் ஒன்றாக இணைத்து பார்த்து வந்தார் அதை குறித்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் எஸ்.ஏ சந்திரசேகரும் வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து இனி விஜயின் அரசியல் பயணத்தில் அவரது தந்தையின் கருத்துக்களும் அடங்கியிருக்கும் நடவடிக்கைகளும் இருக்கும் என்ற பேச்சுக்கள் உலா வந்தது.

இந்த நிலையில் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற விஜய்யின் தந்தையிடம் பத்திரிகையாளர்கள் தரப்பில், விஜயின் அரசியல் செயல்பாடுகளில் எஸ்ஏசி யின் தலையீடு இருக்குமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு எப்பொழுதுமே இருக்கும் என்று பதிலளித்துள்ளார். அதுமட்டுமின்றி பத்திரிக்கையாளர்கள் கோவிலுக்கு வந்த தங்களை வீடியோ எடுப்பதை பார்த்த விஜய்யின் தாயார் இப்படி எல்லாம் எடுக்கக் கூடாது என்று பத்திரிக்கையாளர்களை கடிந்து கொண்ட காட்சியும் அதில் இடம் பெற்றுள்ளது. மேலும் கோவிலுக்குள் நுழைந்ததிலிருந்து சாமி தரிசனம் என அனைத்திலும் விஜய்யின் தாய் மற்றும் தந்தை இருவருடன் பாஜக பிரமுகர் ஒருவர் இருந்துள்ளதும் தற்போது கவனம் பெற்றுள்ளது. இதனால் தமிழக வெற்றி கழகம் பாஜகவுடன் மறைமுக தொடர்பா என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து விஜய் தரப்பில் எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.