Tamilnadu

வாயை பிளக்கும் விராட் கோலியின் சொத்து மதிப்பு! பிரபலங்கள் சொத்து மதிப்பில் நம்பர் 1 ?

Virat Kohli
Virat Kohli

இந்திய  கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்பு கிடு கிடுவென உயர்ந்து இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள பிரபலங்கள் சினிமா நட்சத்திரங்கள் விளையாட்டு வீரர்களின் சொத்து மதிப்பை கணக்கிடும்போது விராட் கோலி இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ரன் மிஷின் சேஸ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் விராட் கோலி களத்தில் அவுட் ஆகாமல் இருக்கும் வரை, எதிரணிக்கு பயம் இருந்து கொண்டே இருக்கும். பல அசாதாரண போட்டிகளில் தனி ஆளாக வென்று கொடுத்துள்ளார். டெல்லியில் பிறந்து வளந்த விராட் கோலி தற்போது கிரிக்கெட் ஜாம்பவனாக உள்ளார். தன் மீது வரும் விமர்சனங்களை தன் பேட்டின் மூலம் தீர்த்து வருகிறார் விராட் கோலி.  கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக இருந்த சாதனைகளை விராட் கோலி எளிதாக முறையடித்து வருகிறார்.


எண்ணற்ற சதங்கள் மற்றும் மேட்ச் வின்னிங் பெர்ஃபார்மென்ஸ் மூலம் விராட் கோலி இந்திய அணிக்கு எல்லா காலத்திலும் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக மாறி உள்ளார். இந்திய அணிக்காக அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் பல சாதனைகள் உருவாகும் அல்லது ஏற்கனவே இருக்கும் சாதனை உடையும். விராட் கோலி இந்தியாவின் இரண்டாவது உயரிய விளையாட்டு விருதான அர்ஜுனா விருதை வென்றுள்ளார். மேலும் பத்மஸ்ரீ, மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இது தவிர டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் 2019ல் கோலியின் பெயர் ஒரு ஸ்டாண்டிற்கு வைக்கப்பட்டுள்ளதுவிராட் கோலி கடந்த 2023 ஆம் ஆண்டு உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்தார். இதேபோன்று நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் விராட் கோலி தான் ஆரஞ்சு நிற தொப்பி வென்றிருக்கிறார்.

இதன் மூலம் விராட் கோலியின் மவுசு அதிகரித்து இருக்கிறது. இதுதான் மேலும் பல விளம்பரங்களில் மாடலாக அறிமுகமான விராட் கோலி காட்டில் பணமழை பொழிகிறது. 2023 ஆம் ஆண்டு முடிவில் தன்னுடைய சொத்து மதிப்பு 29 சதவீதம் அளவு உயர்ந்து இருக்கிறது. குருல் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி விராட் கோலியின் சொத்து மதிப்பு 1894 கோடி ரூபாயாக இருக்கின்றது.விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார்கள் .இருவரும் இணைந்து பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். விராட் கோலி தனது சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு ஏற்ற சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். மும்பை மற்றும் டெல்லியில் ஆடம்பரமான வீடுகள் உள்ளது. மேலும் பல சொகுசு கார்களை வாங்கி குவித்துள்ளார். ஆடி, லம்போர்கினி, பென்சு உள்ளிட்ட சொகுசு கார்கள் விராட் கோலியிடம் உள்ளது. 

மும்பை, டெல்லியை தவிர விராட் கோலிக்கு இந்தியா முழுவதும் பல ஆடம்பர சொத்துக்கள் உள்ளன, இதில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் அடங்கும். மும்பையில் சுமார் 34 கோடி மதிப்பில் ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பை வைத்துள்ளார். கிரிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானத்தை தவிர பல பிராண்டுகள் மூலம் அவருக்கு வருமானம் வருகிறது. இந்த பட்டியலில் ஷாருக்கான் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு ஆயிரத்து ஒரு கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆண்டை விட ஒரு இடம் முன்னேறி இருக்கிறார்.தோனியின் சொத்து மதிப்பு 799 கோடி ரூபாயாக இருக்கிறது. முன்னாள்  கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு 2023 ஆம் ஆண்டு முடிவில் 761 கோடி ரூபாயாக உள்ளது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் தோனி சச்சின் ஆகியோர் தொடர்ந்து விளம்பரங்களில் நடித்து வருவதன் மூலம் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.